Puttalam Online
other-news

கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.

  • 23 May 2019
  • 90 views

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டு  சிறைத்தண்டனை அனுபவித்து வந்த  கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்வதற்கான ஜனாதிபதியின் உத்தரவு இன்று தமக்கு கிடைத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் T.M.J.W. தென்னகோன் தெரிவித்தார். அதனை அடுத்து விடுதலை செய்யப்பட்ட தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.

எக்­னெ­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது  அதனை வழி நடத்­திய அரச சிரேஷ்ட சட்­ட­வாதியை திட்டியமை  நீதிமன்ற அவமதிப்பு உள்­ளிட்ட சில  குற்­றங்கள் தொடர்பில் விதிக்கப்பட்ட  இந்த சிறைத் தண்­ட­னையை 6 வரு­டங்­களில் அனு­ப­விக்க  வேண்டும் என  நீதி­ப­திகள் குழு கட்டளையிட்டிருந்தது. தண்ட­னையை அவர் அனு­ப­வித்து வந்த நிலை­யி­ல் பல தரப்பில் இருந்தும் ஞான­சார தேரரை பொதுமன்­னிப்பின் கீழ் விடு­விக்க வேண்டும் என்ற  கோரிக்கைகள்  வலுப்பெற்றன. இதனையடுத்து ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All