Puttalam Online
regional-news

நோன்புப் பெருநாள் விளையாட்டுக்கள் இரத்து.

நோன்புப் பெருநாள் விளையாட்டுக்கள் யாவும் இரத்து.
——————————————————————————————-

புத்தளம் நகர சபையின் மாதாந்த சபைக்கூட்டம் 2019.05.23 அன்று புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மிக முக்கியமாக; நோன்புப் பெருநாளை முன்னிட்டு வருடா வருடம் புத்தளம் நகர சபையினால் நடாத்தப்படுகின்ற பெருநாள் ரேஸ் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் இரத்து செய்வதோடு, நகர சபை எல்லைக்குள் நடாத்தப்படுகின்ற ஏனைய களியாட்ட நிகழ்வுகளுக்கான அனுமதியும் இரத்து செய்வதாக சபையினால் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதல் காரணமாக மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இன்று கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மத நல்லிணக்கத்தை நோக்காகக்கொண்டு முஸ்லிம்களின் பெருநாளை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற இப்பெருநாள் விளையாட்டுப்போட்டிகளை நகர சபை இரத்து செய்துள்ளது.

அதற்கு பதிலாக வருகின்ற பெருநாள் தினத்தில் “நல்லிணக்கம் , சகவாழ்வு” ரீதியிலான நிகழ்ச்சிகளை நடாத்தவும், மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தாக்குதல் காரணமாக ஏலவே புத்தளம் நகர சபையினால் நடாத்தப்படவிருந்த சிங்கள – தமிழ் புதுவருட நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் பாதிக்கப்பட்டு தமது சொத்துக்களை இழந்தவர்களுக்கும் உதவும் வகையில் புத்தளம் மக்களின் உதவித்தொகைகளை புத்தளம் பெரிய பள்ளி, ஜம்மிய்யதுல் உலமா மற்றும் வர்த்தக சங்கம் என்பவற்றுடன் இணைந்து சேகரித்து அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.


One thought on “நோன்புப் பெருநாள் விளையாட்டுக்கள் இரத்து.

  1. Mohamed SR Nisthar says:

    அப்பாடா நல்ல விசயத்த செய்திருக்கிறார்கள். இதில உள்ள பெரிய விஷயம் என்னவென்றால் இரவு 12 மணிக்கு பிறகு Motorbike tuning செய்து முழு K.K Street மக்களையும் அமைதியாக தூங்க விடாமல் செய்யும் பாதகத்தில் இருந்து இந்தமுறை ஒய்வு என்பதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All