Puttalam Online
other-news

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்

  • 30 May 2019
  • 127 views

இரண்டாவது முறையாக மீண்டும் நரேந்திர மோடி இன்று இந்தியாவின்  பிரதமராக பதவியேற்றார். புதுடில்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா இன்று இரவு 7 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.

இந்திய பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மட்டும் தனியாக  303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றது. அதேவேளை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதாவின் எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.  இந்நிலையில் 30 ஆம் திகதி (இன்று) புதிய அரசு பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கின. ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடத்த விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

 

அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கயைா நாயுடு, காங்., மூத்த தலைவர் சோனியா மற்றும் காங்., தலைவர் ராகுல், மாநில கவர்னர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘பிம்ஸ்டெக்’ எனப்படும், வங்காள விரிகுடா பகுதி நாடுகளான, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, இலங்கை, நேபாளம், பூடான், மொரீஷியஸ், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், விருந்தினர்களாக பங்கேற்றனர். ‘சார்க்’ என அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். பாக்கிஸ்தான்  பிரதமர் இம்ரான் கானுக்கு இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All