Puttalam Online
historical-notes

புத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – ௦4 காதணிகள்

  • 2 June 2019
  • 147 views

காதணிகள்

1. அலுக்குத்து

வெள்ளியாலும் பொன்னாலும்  செய்து காதில் அணியப்படும் ஆபரணம் இது. தங்கத்தினால் அரிதாக செய்யப்படும். கண்ணிப் பெண்கள் பொன்னாலான ஆபரணத்தை அணியமாட்டார்கள். வெள்ளியால் செய்த அலுக்குத்தையே அணிவார்கள். காதின் தோடுகளில் வரிசையாகத் துளையிட்டு அத்துளையுள் வளைவான கம்பிகளை நுழைத்து முனையை பூட்டிவிடுவார்கள். தொங்கியிருக்கும் பகுதியில் அழகிய அலங்காரம் செய்யப்பட்ட பூவரம்புகள் இருக்கும். ஒரு காதில் இத்தகைய அலுக்குத்துக்கள் பதினாறு அணிவது வழக்கமாகும்.

2. கொப்பு 

இது பொன்னாபரணம். அம்பு வடிவத்தில் இருக்கும். காதின் மேல் தோட்டுப் பகுதியில் அணிவர்.

3. காதுப்பூ

காதில் பூவைப்போல் சோனையில் அணியும் பொன்னாபரணம் ஆபரணம் இது. இதில் எதுவும் தொங்கவிடப்பட்டிருக்காது.

4. கும்மத்து 

காதுப்பூவின் கீழ் கூடு போல தொங்கவிடப்பட்டிருக்கும் பொன்னாபரணம் இது.

5. அஞ்சியரசலை

இது ஒரு பொன்னாபரணம். இரு காதிலும் காதுப்பூவுக்கு சற்று மேலே அணியப்படுவதாகும்.

6. அலுக்கறா 

கொப்புக்குக் கீழே காதுகளில் அணியும் பொன்னாபரணம்.

இன்னும் வரும் …


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All