Puttalam Online
other-news

முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா

  • 3 June 2019
  • 76 views

இலங்கை அரசாங்கத்தில் பதவி வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்.  இன்று (3ஆம் திகதி) மாலை அலரி  மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனை  அறிவித்தார். அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தாலும் முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்திலிருந்து விலகப் போவதில்லை எனவும் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் செயற்பாட்டிற்கு தாம் ஆதரவளிப்பதில்லை எனவும் பின் வரிசையில் இருந்து அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போம்  எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது.

மக்களே எம்மை தெரிவுசெய்தனர். இன்று இலங்கை முஸ்லிம்கள் என்றுமில்லாத வகையில் பல துன்பங்களை அனுபவித்துவருகின்றனர். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் முறையாக விசாரித்து தண்டனை வழங்கப்படவேண்டும். கடந்த கால சம்பவங்களுடன் அமைச்சர்கள் எவரும் ஏதாவது முறையில் சம்பந்தப்பட்டிருந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை மூலம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். ஆனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது. விசாரணைகளை சீக்கிரப்படுத்தி ஒரு மாத காலத்துக்குள் இதனை முடிவுக்கு கொண்டுவருமாறும்  ரவூப் ஹக்கீம் வேண்டிக்கொண்டார்.

இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான கபீர் ஹாஷிம், ரிஷாட் பதியுதீன், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி உள்ளிட்ட இலங்கையின் அணைத்து முஸ்லிம்  பாராளுமன்ற பிரதிநிதிகளும் கட்சி பேதமின்றிஒன்றாக இணைந்து கலந்துகொண்டமை ஒரு சிறப்பம்சமாகும். ஊடகவியலாளர் சந்திப்பின் பொது ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் கபீர் ஹாஷிம் அவர்களும் கருத்துத் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All