Puttalam Online
other-news

ஆளுநர்கள் இராஜினாமா

  • 3 June 2019
  • 151 views

ஈஸ்டர் தாக்குதலையடுத்து கிழக்கு மற்றும் மேல்  மாகாணஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கண்டி தலதா மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று (03) ஆளுநர்கள் இருவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் பதவி விலகியதாக தெரிவித்து அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தலும்  வெளியிடப்பட்டுள்ளது. இவர்களின் பதவிவிலகளைத்  தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தில் பதவி வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்தமையும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All