Puttalam Online
regional-news

புத்தளம் பெருநாள் மைதான தொழுகைக்கான அறிவுறுத்தல்கள்

  • 4 June 2019
  • 313 views

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

பெருநாள் மைதான தொழுகைக்கான அறிவுறுத்தல்கள்

இன்ஷா அல்லாஹ் வழமைபோன்று பெருநாள் தினத்தன்று காலை 6.25 மணிக்கு பெருநாள் தொழுகை புத்தளம் சாஹிரா கல்லூரியின் கறுப்பு தரவை மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொழுகைக்காக வருபவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குகளை நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு புத்தளம் முக்கூட்டு தலைமை பொது மக்களுக்காக வழங்குகின்றது.

01. மஸ்ஜித் பகா சந்தியிலும் மாரியம்மன் கோயில் சந்தியிலும் கடமையில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கல்.

02. மஸ்ஜித் வீதியில் குறித்த எல்லையை கடந்து வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

03. சாஹிரா கல்லூரி வளாகம், பகா பள்ளி வளவு மற்றும் கோயில் சந்தியிலுருந்தான குளத்து வீதி ஆகிய இடங்களில் சகல வாகனங்களும் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
04. ஆண்கள், பெண்கள் தொழுகைக்கு முஸல்லாவுடன் சமுகமளித்தல் வேண்டும்.

05. அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின்படி ‘பேஸ்கவர்’ தடை செய்யப்பட்டுள்ளது.

06. பெருநாள் தொழுகைக்கு வரும் பெண்கள் மாத்திரம் மைதானத்தின் பின்வழியாக உள்செல்வதற்கும் முன் வழியாக ஆண்களும் பெண்களும் உள் செல்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

07. மோட்டார் சைக்கில்களில் வருபவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிந்து வருதல் வேண்டும்.

08. தற்போது அவசரகால சட்டம் அமுலில் இருப்பதால் அனைவரும் மிக அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

ஏற்பாடு:
முக்கூட்டு தலைமையின் வழிகாட்டலில்
புத்தளம் இஸ்லாமிய சலாச்சார நலன்புரி சங்கம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All