Puttalam Online
current

புத்தளத்தில் நோன்புப்பெருநாள் தொழுகையும், கொத்துபாவும்

  • 5 June 2019
  • 978 views

 

ரூஸி சனூன் புத்தளம் 

வழமை போன்று இம்முறையும் புத்தளம் இஸ்லாமிய நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்த நோன்புப்பெருநாள் தொழுகையும், கொத்துபாவும் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டு மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட எளிமையான முறையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இம்முறை பெருநாள் தொழுகை புத்தளம் நகர சபை, புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை, புத்தளம் பெரிய பள்ளி ஆகிவற்றின் முக்கூட்டு தலைமையை வழிகாட்டலில் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

தொழுகையையும் கொத்துபாவையும் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி  விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) நடாத்தி வைத்தார்.

தொழுகையின் நிறைவில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் பீ.எம். அப்துல் ஜனாப் ஆகியோரினால் கையொப்பமிடப்பட்ட ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாள் புத்தளம் பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வீதி ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பணிகளை புத்தளம் பொலிஸார் முன்னின்று மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All