Puttalam Online
regional-news

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் புத்தளம் பிரகடனம்

ரூஸி சனூன் புத்தளம் 

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகையின் நிறைவில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் பீ.எம். அப்துல் ஜனாப் ஆகியோரினால் கையொப்பமிடப்பட்டு தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் பகிரங்கமாக வெளியிடப்பட்ட ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாள் புத்தளம் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது தாய் திருநாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் வழமை போன்று எமது பெருநாள் தொழுகையை பொது மைதானத்தில் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளித்த எல்லாம் வல்ல அல்லாஹ்வை புகழ்கின்றோம்.

இந்த மைதான தொழுகைக்கு உதவியும் ஒத்துழைப்பும் செய்த எமது பிராந்திய பாதுகாப்பு பிரதானிகளுக்கும், போலீஸ் பிரதானிகளுக்கும், அரசியல், சமூக, மார்க்க தலைமைகளுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஏப்ரல் மாதம் 21ம் திகதி எமது நாட்டில் கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஐ.எஸ்.தாக்குதலை மீண்டும் கண்டிக்கின்றோம். இதில் உயிர்  நீத்த அனைத்து ஆத்மாக்களின் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை அறிவிப்பதோடு, காயங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள்  அனைவரும் சுகம் பெற்று நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றோம்.

அவ்வாறே மே மாதத்தின் நடுப்பகுதியில் நமது தாயக பூமியில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இனவாத தாக்குதலையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு மிக விரைவில் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வர பிரார்த்திக்கின்றோம்.

பயங்கரவாதத் தாக்குதல்களையும், இனவாத தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகள், இனவாதிகள், இவர்களுக்கு உதவியோர் யாராக இருந்தாலும் தராதரம் பாராது,  இன, மத, மொழி, பேதம் பாராது நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பல அப்பாவி முஸ்லிம்கள் வயது பால் வேறுபாடின்றி கைது செய்யப்பட்டு பல துன்பங்களை அனுபவித்த வண்ணம் உள்ளனர்.அதையிட்டு நாம் வேதனை அடைகின்றோம்.எனவே அவர்கள் பற்றிய விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றம் அற்றவர்கள் கால தாமதம் இன்றி விடுவிக்கப்படவேண்டும்.

வடமேல் மாகாணத்தின் புத்தளம் தேர்தல் தொகுதியில் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு சட்டம் ஒழுங்கை சரியாக செய்து எமது பிராந்தியத்தை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருந்த புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் எமது பிராந்திய முப்படை வீரர்களையும், பொலிஸ் துறை உயர் அதிகாரிகளையும், புலனாய்வு துறையினரையும் நாம் கௌரவப்படுத்துகின்றோம்.

பல்லின சமுதாயங்கள் சட்ட ரீதியாக வாழும் எமது இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் யாப்புக்கு மாறாக எமது முஸ்லிம் சமூகத்தை நோக்கி ஏவப்படும் எந்த இனவாத செயற்பாடுகளும் சமூக நல்லிணக்கத்துக்கு பாதகமாகும் என்பதால் அவற்றை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். (உதாரணம், முஸ்லிம் பெண்களின் ஆடை, மனித உரிமைகள்)

நாட்டின் பாதுகாப்புக்காகவும், அமைதிக்காகவும் இன முறுகல்களை தவிர்ப்பதற்காவும் தம்மை புலன் விசாரணைகளுக்கு உட்படுத்தும்படியும், அதற்கு தடையாக இருக்கும் தமது பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அனைவரையும் பாராட்டுகிறோம்.

எமது சமூகத்துக்குள் உள்ள ஜமாஅத், இயக்க, கட்சி பிரிவினைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு ஒற்றுமையாக, ஐக்கியமாக, முரண்பாடுகளில் உடன்பாடுகளை களைந்து எமது சமய, அரசியல், பொருளாதார சமூக செயற்பாடுகளை ஒழுங்கமைத்து கொள்வதற்கு பணிவுடன் அழைப்பு விடுக்கின்றோம்.

எமது தாயகத்தில் வாழும் அனைத்து பிரஜைகளுடனும் இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகள் இன்றி இலங்கை மாதாவின் ஒரே குடும்பமாக சமூக நல்லிணக்கத்துடனும், இன நல்லுறவுடனும் வாழ நம்மை நாம் அர்ப்பணிப்போமாக.

பயங்கரவாதம் ஒழிக, இன வாதம் ஒழிக, மத வாதம் ஒழிக, தீவிரவாதம் ஒழிக, பிரிவினை வாதம் ஒழிக, சாந்தி, சமாதானம், சகவாழ்வு, ஐக்கியம் வாழ்க, ஈத் முபாரக்.


One thought on “ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் புத்தளம் பிரகடனம்

  1. Mohamed SR Nisthar says:

    “முரண்பாடுகளில் உடன்பாடுகளை களைந்து ” ???????????????????????????????????

    என்னப்பா பெருநாள் பிரகடனம் இப்படியாகிவிட்ட்து? உடன்பாடுகளில் முரண்பாடுகளை களைவதா அல்லது முரண்பாடுகளில் உடன்பாடுகளை களைவதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All