Puttalam Online
regional-news

ஆண்டிமுனை ஆதவன் பாடசாலைக்கான மலசலகூட வசதி

  • 21 June 2019
  • 115 views

-க.மகாதேவன் –

சனத் நிஷாந்த அமைப்பு -பிரித்தானியா கிளை ஏற்பாடு செய்த ஆண்டிமுனை ஆதவன் பாடசாலைக்கான மலசலகூட வசதி மின்சார வசதி மற்றும் அங்கவீனமுற்ற ஒருவருக்கான  முச்சக்கர வண்டி போன்றவை வழங்கும் நிகழ்வொன்று (16)திகதி ஞாயிற்றுக்கிழமை புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் திரு.சனத் நிஷாந்த தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வை பொதுஜன பெரமுன ஒழுங்கமைப்பாளர் திரு.எம்.சுபாஷ் மேற்கொண்டிருந்தாா்.இந்த நிகழ்வில் ஆராச்சிக்கட்டு முன்னாள் பிரதேச சபைத் தலைவர் திரு.ஜகத் சமந்த அவர்களும் கலந்து கொண்டாா்.பாராளுமன்ற உறுப்பினர் சின்னஞ்சிறாா்களினால் வெற்றிலை கொடுத்து வரவேற்கப்பட்டாா்.

இந்தக் கட்டடத்துக்கான அடிப்படை வசதிகள் மிக விரைவில் வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய பாராளுமன்ற உறுப்பினரால் பரிந்துரைக்கப்பட்டது.மேலும் உடப்பு 1ம் வட்டாரத்தைச்  சேர்ந்த அங்கவீனமுற்ற  திரு.மாயா என்பவருக்கு முச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது.

பிரித்தானியா கிளையில் தலைவராக திரு.எம்.சகாதேவன்-(உடப்பு) – திரு.சம் சைலன்ட்ரா(உப தலைவர்)திரு.ரிஷான் பொ்னாண்டோ (பொருளாளர்)ஆகியோா் அங்கம் வகிக்கின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All