Puttalam Online
regional-news

புத்தளம் தள வைத்தியசாலைக்கு உயர் தொழில் நுட்ப கருவியொன்று அன்பளிப்பு

  • 21 June 2019
  • 999 views

ரூஸி சனூன் புத்தளம் 
புத்தளம் தள வைத்தியசாலைக்கு, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் உயர் தொழில் நுட்ப கருவியொன்று கொழும்பு மேற்கு பிரிவின் இனவீல்  கழகத்தினரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனை வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (19) காலை  வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் சுமித் திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
புத்தளம் தள வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் நீலிகா திஸாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில் 02 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த இந்த உபகரணத்தை கொழும்பு மேற்கு பிரிவின் இனவீல்  கழகம் வழங்கியுள்ளது.
“மெடிகல் எய்ட் டூ ஸ்ரீ லங்கா இன் யூ கே” நிறுவனத்தின் தலைவி
டாக்டர் நளினி ரணசிங்கவின் வழிகாட்டலில் இந்நிறுவனத்தின் பூரண அனுசரணையோடு இந்த பெறுமதி வாய்ந்த உபகரணம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கொழும்பு மேற்கு பிரிவின் இனவீல் கழகத்தின் தலைவி சாந்த ஜயலத் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்களும் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All