Puttalam Online
other-news

தெகிவளை ஜெயலங்கா ஹாட்வெயார் உரிமையாளர் கொலை செய்யப்பட்டார்

  • 25 June 2019
  • 75 views

(அஸ்ரப் ஏ சமத்)
இனம் தெரியாத நபா்  தெகிவளையில் உள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான  ஹாட்வெயாா் உள் சென்று  உரிமையாளரிடம் கப்பம் கேட்டுள்ளாா். கொடுக்க மறுத்ததால்  உரிமையாளரை உடன் கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளாா்.

இச்சம்பவம் – தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் உள்ள காலி வீதியில் உள்ள ஜெயலங்கா ஹாட்வெயாரில் நடைபெற்றுள்ளது  உரிமையாளரான அப்துல் அசீஸ் வயது 60 என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளாா்.

இச்சம்பவம் இன்று (24 ம் திகதி) பகல் 3மணிக்கு நடைபெற்றுள்ளது. தெகிவளை பொலிசாா் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனா். அப்துல் அசீசை பாதையில் சென்றோரே  களுபோவிலை வைத்தியசாலையில் கொண்டு சென்றுள்ளனர் அவருக்கு அதிக இரத்தம் பீரிட்டுள்ளது  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே அவா்  இறந்துள்ளாா்.

சம்பவம் நடைபெற்ற நேரத்தில்  அவர் தனியகவே ஹாட்வெயரில்  கடையில் இருந்துள்ளாா்.  கப்பம் கேட்டவா் உடன் கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பியோடியதாகவும் காப்பாற்றுங்கள் என அவா் கடையினுள் கதறியிருக்கின்றாா். அதன் பின்னரே அப்பாதையில் சென்றவா்கள்  வைத்தியசாலையில் கொண்டு சென்றதாகவும்  அருகில் உள்ளவா்கள் தெரிவிக்கின்றனா்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All