Puttalam Online
other-news

இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான உதவிகளை சர்வதேசத்திடம் கோரவுள்ள றியாஸ்

  • 25 June 2019
  • 51 views

இலங்கை இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் -எம்.எஸ். றியாஸ் ஜெனீவா பயணமாக முன்னர் தெரிவிப்பு

( இர்ஷாத் றஹ்மத்துல்லா )

சர்வதேச தொழிலாளர் அமைப்பும்,சர்வதேச கூட்டுறவு அமைப்பும் இணைந்து ஜெனீவாவில்  ஏற்பாடு செய்துள்ள கூட்டுறவும்,அதனது எதிர்கால செயற்பாடுகளும் எனும் தொனிப்பொருளிலான உயர் மட்ட மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு இலங்கையில் இருந்து இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.றியாஸ் பயணமானார்.

இன்று 24 ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையாகம் அமைந்துள்ள ஜெனீவாவில் ஆரம்பமாகும் மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளும் முஹம்மத் றியாஸ் மாநாட்டின் புதிய சில திருத்தங்களை இதன் போது சமரப்பிக்கவுள்ளார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு நுாற்றாண்டு காலமாக உலகம் முழுவதும் தமது பணியினை செய்துவருகின்ற நிலையில் இலங்கையில் பல்வேறு செயற்பாடுகளுக்கு தமது பங்களிப்பினை வழங்கிவருகின்றது.கல்வி,தொழில் பிரச்சினை மற்றும் நிலையான அபிவிருத்தியின் ஊடக கூட்டுறவு அமைப்புக்களின் மேம்பாடுகள் என்பன பற்றி மேற்படி மாநாட்டின் போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும்,இலங்கையின் கூட்டுறவு துறையினை தனியார் துறையுடன் போட்டியிடும் அளவுக்கு முன்னேற்றம் காணச் செய்வதன் அவசியத்தையும் இன்றைய இந்த மாநாட்டில் முன் வைக்கவுள்ளதாக இலங்கையின் சார்பில் கலந்து கொள்ளும் இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.றியாஸ் தெரிவித்தார்.

இந்த மாநாட்டினையடுத்து இங்கு வருகைத்தந்துள்ள சர்வதேச நாடுகளின் கூட்டுறவு அமையப் பிரதி நிதிகளுடன் இலங்கைக்கு அதிகம் நன்மைப் பயக்கும் வகையில் இலங்கை கூட்டுறவு அமையத்தின் அங்கத்தவர்களினதும்,இளைஞர்களினதும் எதிர்கால முன்னேற்றத்துக்கும் தேவையான  பயிற்சிகளை பெற்றுக் கொடுப்து தொடர்பில் கலந்துரையாடல்களை செய்யவுள்ளதாகவும் முஹம்மத் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All