Puttalam Online
regional-news

புத்தளம் மாவட்ட சேத விபரங்கள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கையளிப்பு

  • 25 June 2019
  • 129 views

ரூஸி சனூன் புத்தளம் 

அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணத்தின் பிரதியொன்று புத்தளம் பீ.சி.எம்.எச். நிறுவனத்தினரால் செவ்வாயன்று புத்தளத்திற்கு வருகை தந்திருந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சத்குனநாதனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பீ.சி.எம். எச். நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஏ.எச்.எம். றிஸ்வான் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சத்குனநாதனிடம் இதனை கையளித்தார்.

புத்தளம் பீ.சி.எம்.எச். நிறுவனமானது கடந்த 13.05.2019ம் திகதி புத்தளம் மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளானவர்களின் விபரங்களை திரட்டி ஆவனப்படுத்தும் வேலைத்திட்டத்தை அதன் தலைவர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மேற்கொண்டது.

இதன்போது பாதிப்புக்குள்ளான அனைவரையும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களின் பாதிப்புக்கள் குறித்து சாட்சியங்களும் தகவல்களும் திரட்டப்பட்டு ஒரு ஆவனமாக தொகுக்கப்பட்டது.

ஒரு உயிரழப்பு, பள்ளிவாசல்கள் 08, வர்த்தக நிலையங்கள் 33, வீடுகள் 54, வாகனங்கள் 14, கொள்ளைச் சம்பவங்கள் 08 போன்றன தாக்குதல்களின் சேத விபரத் தொகுப்பாகும். அன்னளவாக 57.3 மில்லியன் ரூபாய்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் அடங்கிய ஆவனத்தின் பிரதியொன்றை முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் அவர்களுக்கு அந்த கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளார்  அலி சப்ரி ரஹீம் அவர்களினூடாக கடந்த வாரம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All