Puttalam Online
current

சாஹிரா மாணவர்களுக்கு நகர பிதாவினால் மகத்தான வரவேற்பு

  • 15 July 2019
  • 395 views

சாஹிரா மாணவர்களுக்கு நகர பிதாவினால் மகத்தான வரவேற்பு
——————————————————-

வடமேல் மாகான மட்ட பாடசாலைகளுக்கான U-16, U-18 மற்றும் U-20 உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் புத்தளம் சாஹிரா கல்லூரி முறையே செம்பியனாகவும், மூன்றாம் இடத்தையும், ரனர்-அப் ஆகவும் வெற்றிபெற்று தேசிய மட்ட சுற்றுப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

 

 

 

 

 

 

வெற்றிவாகை சூடி புத்தளத்துக்கு பெருமை சேர்த்துத் தந்த மாணவச் செல்வங்களுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் நேற்று மகத்தான வரவேற்பளித்து கௌரவித்தார்.

மாணவர்களை நகரமெங்கும் வாகனப் பேரணியாக அழைத்துச்சென்று, புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் பதக்கம் அணிவித்து கௌரவித்தார் நகர பிதா. வழிநெடுகிலும் பொதுமக்களும் மாலையிட்டு மாணவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All