Puttalam Online
historical-notes

புத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – ௦6 கழுத்தணிகள்- 1

  • 24 July 2019
  • 63 views

கழுத்தணிகள் – 1

1. பின் கொக்கித்தாலி

சிறு சிறு சதுரத்தட்டுகளாக அலங்கார வேலைப்பாடுகளின் கூடிய துண்டுகளை கெட்டியான பல பட்டுக்களுள்ள கருப்பு நூலில் பதித்துப் பின்னி கழுத்தைச் சுற்றிக்கட்டும் பொன் நகை இது.

2. பவள உக்கட்டு

பொன்னாலானது. பகள உக்கட்டு என்றும் சொல்வர். பவளம் எனப்படும் ஒருவகை மணியுடன் கெட்டியான நூலில் கோர்த்து பின் கொக்கித்தாலி மாலைக்குக் கீழே கழுத்தில் அணிந்துகொள்வர்.

3. கறுப்பு மணி

கறுப்பு, சிவப்பு பாசிமணிகளுடன் போன் மணிகளைக் கலந்து கோர்த்துக் கழுத்தைச் சுற்றிக் கட்டப்படும் அணிகலன் ஆகும். திருமணத்துக்கான கொத்துபாஓதப்படும்போது மணமகளின் கழுத்தில் கட்டுவது வழக்கமாக இருந்தது.

இன்னும் வரும் …


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All