Puttalam Online
education

ImTS இன் பட்டமளிப்பு விழாவும் அதன் வெற்றி பயணமும்

  • 27 July 2019
  • 626 views

ImTS இன் Professional Diploma in Web Development and Design பாடநெறிக்கான முதலாவது பட்டமளிப்பு விழா 07/07/2019 அன்று புத்தளம் Willpaththu Gate கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இப்பாடநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விஷேட சித்திபெற்ற மாணவர்களுக்கு விஷேட விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வை சிறப்பிக்க புத்தளம் கல்வி மற்றும் கணணி துறைசார் நிபுணர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். சிறப்பு அதிதிகளின் சேவைகளுக்காக அவர்களும் விஷேடமாக கெளரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ImTS (Imara Technology Studies), புத்தளத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னனி நிறுவனமான Imara Software Solution (pvt) Limited இன் ஒரு துணை நிறுவனமாகும். இது 2014 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

ImTS இன் விஷேட பாடநெறியான Professional Diploma in Web Development & Design புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒரு பாடநெறியாகும். மேலும் சமகால தொழில்வாய்ப்புக்களையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதுடன் தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிசிறந்த அனுபவங்களைக் கொண்ட IMARA வின் துறைசார் நிபுணர்களால் நடத்தப்படுகின்றது.

இக்கற்கை நெறியானது 3 மாதகால கற்கையுடன் 6 மாதகால முழு நேர தொழில் பயிற்ச்சியும் உள்ளடக்கியது என்பது தனித்துவமான சிறப்பம்சமாகும்.

இப் பாடநெறி தகவல் தொழில் நுட்பத் துறையில் சமகால கேள்விகளுக்கு ஏற்ப மாணவரகளை தகவல் தொழில் நுட்பத் துறைக்கு தயார் படுத்துவதுடன் அவர்களின் உயர்கல்வியினை தகவல் தொழிநுற்ப துறையில் தொடர்வதற்கு ஒரு சிறந்த ஆரம்ப புள்ளியாக திகழ்கிறது.

இப்பாடநெறியை பூர்த்தி செய்த திறமைவாய்ந்த மாணவர்கள் Imara Software Solution (PVT) Ltd. இல் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொண்டுள்ளமையும் சமகாலத்தில் தொழிலுடன் உயர்கல்வியினை தொடர்கின்றமையும் இப்பாட நெறியின் முக்கிய அடைவுகாளாகும்.

தரம் 06,07,08,09,10, O/L மற்றும் A/L வரையிலான பாடசாலை மாணவர்களுக்கான ICT பாடநெறியும் துறைசார் நிபுணர்களால் நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது!

 

ImTS நிறுவனத்தின் பணிபாளர்களும் தகவல் தொழிநுட்ப நிபுணர்களும்

 

சிறப்பு அதிதிகள் விஷேடமாக கெளரவிக்கப்பட்ட போது


விஷேட சித்திபெற்ற மாணவர்களுக்கு விஷேட விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்ட போது

 

சகோதரர் ஹிஷாம் ஹுசைன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது

CEO, Imara Software Solutions (PVT) Limited

CEO, Imara Technology Studies  (PVT) Limited

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All