இந் நிகழ்வின்போது சிரேஸ்ட பொலிஸ் மாஅதிபரும் விசேட அதிரப்படையின் கொமாண்டா் எம். ஆர் லத்தீப் , சிரேஸ்ட சட்டத்தரணியும் முன்னாள் துாதுவர் கொழும்பு சாகிராக் கல்லுாாி அதிபராக கடமையாற்றிய யாவீத் யுசுப் இவ் ஆண்டுக்கான கௌரவ விருதான ” வை” விருது வழங்கப்பட்டது. அத்துடன் வை.எம்.ஏ. சமுக சேவை மற்றும் பல்வேறு தேசிய நல்லிணக்கம், கல்வி. சுகாதாரம் ,சிரமதானம் ,தலைமைத்துவ பயிறசி ஆகியவ்ற்றில் சிறந்த சேவையாற்றிய வை.எம்.எம். ஏ கிளைகளின் தலைவா்கள் செயலாளா்களுக்கும் பிரதம அதிதியினால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய பங்களதேஸ் உயா்ஸ்தானிகர் றியாஸ் கம்துல்லா –
கல்வி, முதலீடு மற்றும் வா்த்தக துறையில் இலங்கையா்கள் 30ஆயிரம் பேர் வங்களதேசில் கடந்த 30 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றாா்கள். அவா்களை எமது நாடு ஒரு போதும் முஸ்லிம் தமிழ் சிங்களம் என அடையாளம் காண்பதில்லை அவா்கள் அணைவரும் இலங்கையா்கள் எனவே காண்கின்றோம். எமது நாட்டில் 70வீத முஸ்லீம்களும் 20வீத இந்துக்கள், மற்றும் ஏனைய இனத்தவா்களும் எவ்வித இன,மத மொழி குல வித்தியாசமின்றி எல்லோரும் பங்களாதேசியா்களாக வாழ்ந்து வருகின்றனா்.அதே போன்று இலங்கையிலும் சகல இனத்தவா்களும் ஒன்றினைந்து இலங்கையா் என்ற ரீதியில் நாம் வாழவேண்டும். இவ் வைபவத்தில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட வை.எம். ஏ பௌத்த செயலாளா் மகேந்திராவின் பௌத்த வை.எம்.எம். ஏ இயக்கமும் வை.எம்.ஏ முஸ்லிம் இயக்கமும் ஒன்றினைந்து இந்த நாட்டில் சமுக சேவைகளிலும் சேவை செய்தல் வேண்டும். இரு இனத்தவா்களிடையேயும் தத்தமது கிளைகள் ஊடாகவும் தேசிய நல்லிணக்த்திணை ஏற்படுத்த முடியும் . கடந்த மாதம் கொழும்பு விக்டோரியா பாக்கில் இரத்த தானம் வழங்கும்போது என்னுடன் இந்த நாட்டில் உள்ள பல நாட்டு துாதுவா்களும் முன் வந்து இலங்கை இரத்த வங்கிக்கு இரத்த தானம் வழங்கினாா்கள் ஆகவே அந்த இரத்தம் பங்களாதேசி இரத்தம், அரேபிய இரத்தம் என நாம் வித்தியாசம் பாா்ப்பதில்லை
எங்களது இரத்தம் இந்த நாட்டில் வாழும் மனிதா்களது இரத்த்திலும் கலந்துள்ளது.. என பங்களதேஸ் உயா் ஸ்தாணிகா் அங்கு கருத்து தெரிவித்தாா்.
Share the post "அகில இலங்கை வை.எம்.எம். ஏ பேரவையின் 69வது வருடாந்த பேரளாா் மாநாடு"