Puttalam Online
current

ஜனாதிபதி சந்திப்பு – சந்ததி காக்கும் சரித்திரப்போராட்டத்தில் இது இன்னுமோர் அடைவு…!

ஜனாதிபதி சந்திப்பும் சில உண்மைகளும்…!
——————-

#Cleanputtalam மக்கள்போராட்டத்தில்
இதுவரை சாத்தியப்படாதிருந்த ஜனாதிபதி சந்திப்பு இன்று (31-07-2019) நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்.

விஷேட பிரயத்தனம் ஒன்றை எடுத்து குறித்த நிகழ்வில் #cleanputtalam பிரதிநிதிகளை கலந்துகொள்ள ஏற்படுகளை செய்துதந்த கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு முதலில் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜனாதிபதி my3, வடமேல் மாகாண கவர்னர் Asoka, அமைச்சர் ரிஷாட், அமைச்சர் சம்பிக்க, வண்ணாத்திவில்லு chairman சமந்த, CEA – மத்திய சுற்றுப்புற சூழல் அதிகாரசபை, கொழும்பு மாநகர சபை (CMC), தெரிவுசெய்யப்பட்ட சில மதகுருக்கள் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த இக்கூட்டம், ஒரு தெளிவான திட்டத்துடன்தான் கூட்டப்பட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள எமக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.

குப்பைத்திட்டத்துடன் சம்பத்தப்பட்ட சகல தரப்புகளையும் அழைத்து, அதுசார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் விஷேட வேண்டுகோளின்மூலம் அல்லது கட்டளையின் மூலம் தீர்த்துக்கொள்வதனூடாக எந்த இடையூறும் இன்றி குப்பைகளை கொட்டிக்கொள்வதே அத்திட்டம்..!

—————-

” இதிலே என்ன பிரச்சினை இருக்கிறது ?” என்று அமர்வை ஆரம்பித்தார் ஜனாதிபதி.

“ஒன்றுமில்லை.. வண்ணாத்திவில்லு பிரதேசசபை இத்திட்டத்தை ஆதரிக்கிறது ஆனால் தினமும் 1 லட்சம் வீதம் மாதாந்தம் 3 மில்லியன் தங்களுக்கு தரப்படவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறது..! அதனை CMC வழங்க வேண்டும்..!” – மெகாபொலிஸ் Nihal.

” ஆம் நாம் இத்திட்டத்திற்கு எதிரானவர்கள் இல்லை.. ஆனால் எமது சேரக்குழி கிராமம் காய்ந்துபோய் கிடக்கிறது..! இந்த திட்டத்தால் இன்னும் பாதிக்கப்படும் எனவே இதனை முகாமைத்துவம் செய்ய குறைந்தது 3 மில்லியன் மாதாந்தம் தருவதானால் நாம் எமது ஆதரவை தருகிறோம்.” – வண்ணாத்திவில்லு chairman samantha.

” இல்லை இத்திட்டத்தை நாங்கள் முற்றாக எதிர்க்கிறோம்…! நீங்கள் நிலைமையை நேரில் வந்து பார்க்கவேண்டும்… பக்கத்தில் கடல்…,
200 மீட்டருக்குள் குடியிருப்புகள்…, நெருக்கமாக காடு.., அன்றாடம் தொழில் செய்யும் விவசாய நிலங்கள் அனைத்தும் இதனால் பாதிக்கப்படப்போகிறது.. இதனை உடனடியாக நிறுத்தவேண்டும் ” – பாதர் christy perera

” இல்லை திட்டத்தை நிறுத்த முடியாது.. இதுவரை சுமார் அரைவாசி வேலைகள் முடிந்து விட்டது.. இது ஓர் தேசியப்பிரச்சினை நீங்கள் தயவுசெய்து ஒத்துழைக்கவேண்டும்…! நீங்கள் சிங்கப்பூருக்கு சென்று பாருங்கள்… ஜப்பானுக்கு சென்று பாருங்கள்.. அங்கெல்லாம் நகரின் மத்தியில் தான் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன… இங்கு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது நீங்கள் பயப்படவேண்டாம்..” – ஜனாதிபதி my3

” ஜனாதிபதியவர்களே… இவர்களின் நவீன தொழில்நுட்பத்தை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்…!
அண்மையில் குளியாப்பிட்டியவில் இருந்து கொண்டுவந்த குப்பைகளை போட்டு மூடிய முறையை நேரில் சென்று பார்த்தேன்… இவர்கள் 100 வருடத்துக்கு போடும் பொலித்தீன் லேயர் இப்போதே கிழிந்து தொங்குகிறது…! அதற்கூடாக அந்த குப்பைகள் மண்ணில் கலந்திருக்கிறது… இதோ இங்கிருக்கும் chairman சமந்த அதனை அவரது இரண்டு கண்களாலும் பார்த்தார்…” – பாதர் christy perera

” நிறுத்துங்கள்… இனி இப்படிப்பேச வேண்டாம். இப்படிப் பேச நான் தயாரில்லை..!
குளியாப்பிட்டியவில் நிகழ்வதை அருவக்காட்டுக்கு ஒப்பிடாதீர்கள்… !” – ஜனாதிபதி my3

” ஜனாதிபதியவர்களே நாங்கள் குளியாபிட்டியவை பற்றிப்பேசவேயில்லை…! அங்கிருந்து வந்த குப்பை அருவக்காளுவில் தட்டப்பட்டபோதுள்ள நிலையைத்தான் பேசுகிறோம்…!” – பாதர் christy perera & cleanputtalam

” இவர்கள் இப்படித்தான் எதையுமே செய்ய விடமாட்டார்கள்…! மீத்தோட்டமுல்லையில் மக்கள் மரணித்தபோது இவர்கள் எங்கு இருந்தார்கள்..? இந்த (கிறிஸ்தவ) சமூகம்தான் எல்லாவற்றுக்கும் தடையாக இருக்கிறது… இந்த நாட்டில் அனல்மின்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அதனை நீண்டகாலம் பிற்போடவைத்து மக்களை இருட்டில் இருக்கவைத்தவர்கள் நீங்களும் உங்கள் கார்டினல் மார்களும் மஹாபள்ளிகளும் தான்.. இந்த நாட்டில் நீதியை மதிக்காமல் அருவாக்காலு எல்லைக்குள் புகுந்து கண்ணாடியை உடைத்தவர்களும் நீங்கள் தான்.. எனக்கு கிறிஸ்தவர்களின் வாக்குகள் தேவையில்லை…! இது என்னுடைய பிரச்சினை அல்ல நாட்டின் பிரச்சினை தயவு செய்து ஒத்துழையுங்கள்…” – அமைச்சர் Champika

” நாங்கள் பலவற்றையும் பரீட்சித்து மக்கள் கருத்துகளையும் உள்வாங்கிய நிலையிலேயே இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கினோம்..” – CEA பிரதிநிதி.

” அனைவருக்கும் வந்தனம்… நான் இத்திட்டத்தை ஆரம்பத்தில் எதிர்த்தவன் ஆனால் இதுபற்றிய உண்மைகளை தெரிந்துகொண்ட பின்னர் இப்போது நான் எதிர்ப்பதில்லை… ” – sumitha ஹாமதுரு.

” சரி.. நாம் இதெற்கென்று சகல தரப்பும் அடங்கிய ஒரு committee யை அமைப்போம் அவர்களது மேற்பார்வையில் திட்டத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்துவோம்…” – கவர்னர் Asooka

” ஆம் அப்படியே செய்வோம்.. அதுதான் பொருத்தமானது…” – ஜனாதிபதி my3

பாதர் christy perera சிலவார்த்தைகள் பேச… மீண்டும் அமைச்சர் champika சற்று காரசாரமாகவே பேசி, “உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள் எம்மால் முடிந்ததை நாம் செய்கிறோம்… ” என முடித்தார்.

” ஜனாதிபதியவர்களே… அமைச்சர் சம்பிக்க அவர்களே… இப்படி, பலவந்தமாக எதையும் செய்வது பொருத்தமான வழிமுறை அல்ல…
இது ஒரு ஜனநாயக நாடு… உங்களையும் என்னையும் இந்த அரசாங்கத்தையும் தெரிவுசெய்தவர்கள் அவர்கள்தான்…
அவர்கள் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்… 200 நாட்கள் வீதியில் இருந்து கத்திவிட்டு இங்கு வந்திருக்கிறார்கள்… நீங்கள் புத்தளம் சென்றபோது உங்களை சந்திக்க முயற்ச்சி செய்து சிலநிமிடங்கள்கூட வழங்கப்படாமல் போலீசினால் தாக்கப்பட்ட நிலையில் வந்திருக்கிறார்கள்… பாதர் அவர்கள் நேராக தனது கண்களால் கண்டதை கூறுகிறார்… அவற்றை சரியாக கேட்டறிந்து, கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவதே பொருத்தமானது…” – அமைச்சர் Rishad

” யார் சொன்னது நாம் பலவந்தமாக செய்யப்போவதாக..? எம்மிடம் போலீஸ் இருக்கிறது system இருக்கிறது.. அதற்கூடாகவே சட்டப்படி எதுவும் நடக்கும்..” – அமைச்சர் Champika

” ஜனாதிபதியவர்களே.. இந்த போட்டோவை கொஞ்சம் பாருங்கள்…! இது உங்கள் photo… நீங்கள் finland உடன் கைச்சாத்திட்ட 3 waste to energy project இன் பிரதி…! இதன் மூலமாக கொழும்பிலிருக்கும் அன்றாட குப்பைகளை கொழும்பிலேயே energy யாக மாற்றமுடியுமாக இருக்கும்போது, எந்த குப்பைகளை தட்டுவதற்காக அருவாக்கலுவை தயார் செய்கின்றீர்கள்..? உலகக்குப்பைகளை தட்டுவதற்கே அது தயாராகிறது…!!” – Arshad Ali #cleanputtalam

“CEA பிரதிநிதியவர்களே, உங்களிடம் நான் சில கேள்விகளை கேட்கிறேன்… இந்த குப்பை project இதுவரை பல தடவைகள் உங்களது EIA report விதிகளை மீறியிருக்கிறது..! நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்…?
இதோ உங்கள் EIA report…!
‘Tipper இல் குப்பை கொண்டுவரப்படக் கூடாது’ என உங்கள் நிபந்தனைகள் கூறுகிறது.. ஆனால், இதுவரை எத்தனையோ ‘டிப்பர்’களில் கூளம் வந்துவிட்டது.. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…?
project இன் முதல் பாகங்களாக ‘kelani transfer station அமைக்கப்படவேண்டும்..’, ‘பிரத்தியேக புகையிரத பாதைகள் அமைக்கப்படவேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது… அது ஒன்றுமே நிகழாமல்.. அனைத்துமே பூர்ச்சியமாக இருக்கும்போது, 4 ஆம் 5 ஆம் இடத்தில இருக்கும் குப்பை தட்டும் வேலைகளை ஆரம்பித்ததை எப்படி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்…?
எங்களுக்குத்தெரியும்… CEA விலிருந்து யார் இதற்க்கு அனுமதி கொடுத்தார் என்றும் தெரியும்..! அதே நபர் இப்போது இந்த குப்பை திட்டத்தில் என்ன position இல் வேலை செய்கிறார் என்றும் எங்களுக்குத்தெரியும் ” – Arshad Ali #cleanputtalam

“ஜனாதிபதியவர்களே, இதோ பாருங்கள் எனது கையிலுள்ள உலகவங்கியின் criteria வை…! இதன்படி,
சுன்னக்கல் நிலத்தில் இத்திட்டம் செய்யப்படக்கூடாது…! ஆனால் இவர்கள் அத்தவறை செய்கிறார்கள்…!!
காற்று வீசும் பிரதேசத்தில் இது செய்யப்படக் கூடாது..! ஆனால் இவர்கள் அதைச் செய்கிறார்கள்…!!
குடியிருப்புகளில் இத்திட்டம் அமைக்கப்படவே கூடாது..! ஆனால் இவர்கள் அங்குதான் அமைக்கிறார்கள்…!!
இதுதான் இத்திட்டத்தின் யதார்த்தம்… !! இதனைத்தான் நீங்கள் உலகத்தரம் வாய்ந்தது எனக் கூறுகின்றீர்களா ?? ” – Arshad Ali #cleanputtalam

” நிறுத்து… பச்சை பொய் சொல்கிறாய்… நிறுத்து..!” – அமைச்சர் Champika

” தயவுசெய்து நீங்கள் அமைதியாக இருங்கள்… நீங்கள் பேசும்போது நாம் கேட்டுக்கொண்டிருந்ததுபோல இப்போது நாங்கள் பேசும்போது நீங்கள் அமைதியாக இருங்கள்…” – Arshad Ali #cleanputtalam

——————–

அதன் பின்னர் சிறிது நேரம் சூடான வாக்குவாதமாகவே அக்களம் அமைந்திருந்தது…!

” ஆரம்ப காலத்தில், ‘ஆகாயத்திலிருந்து கீழே விழுந்துவிடுவோம்’ எனப்பயந்து பலர் flight இல் போகாததுபோலத்தான்
உங்கள் பயமும் இருக்கிறது…,” என்ற பெருமானமில்லாத ஒரு அவசரக் குறிப்போடு…
“இதற்குமேல் இந்த meeting இல் என்னால் இருக்கமுடியாது” என்று கூறி எழுந்து சென்றுவிட்டார் ஜனாதிபதி…

அமைச்சர் champika எழுந்து வந்து, எமக்குப் பக்கத்தில் நின்று மேலும் தொடர்ந்தது அந்த விவாதம்…!

———————

நாளையோ நாளை மறுநாளோ இன்னொரு meeting ஐ போட்டு, தலையாட்டி பொம்மைகளை மட்டும் அழைத்து, தாம் நினைத்ததுபோல் முடிவுகளை எட்டிக்கொள்வது அவர்களுக்கு சிரமமாக இருக்காது…!

ஆனால்… நேருக்கு நேர் பேசி வாயடைத்துப்போன இன்றைய நிமிடங்களும் நாம் பேசிய உண்மைகளும் அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும்…!

———————-

எம்மைப்பொறுத்தவரை,
சந்ததி காக்கும் சரித்திரப்போராட்டத்தில் இது இன்னுமோர் அடைவு…!

# இந்த நாட்டு மக்களுக்கும்
# இந்த நாட்டின் பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்
# இந்த நாட்டின் நீதி மன்றத்திற்கும்
இதுவரை கொண்டுசெல்லப்பட்ட புத்தளத்தின் செய்தி…,

# இன்றய தினம் இதுவரை காத்திருந்த நாட்டின் ஜனாதிபதிக்கும், அரசுக்கும் அழுத்தம் திருத்தமாக பக்கத்தில் நின்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது..!!
# இந்த திட்டத்தோடு சம்பந்தப்பட்ட சகலரையும் ஒரே மேசையில் வைத்து கருத்தால் சந்தித்திருக்கிறது..!

அல்ஹம்துலில்லாஹ்.
——-

Clean Puttalam
31-07-2019


One thought on “ஜனாதிபதி சந்திப்பு – சந்ததி காக்கும் சரித்திரப்போராட்டத்தில் இது இன்னுமோர் அடைவு…!

  1. Mohamed SR Nisthar says:

    Weldon Arshad. Chambikka is a bully, it’s well known fact. I appreciate your courage. Don’t give up. I have no doubt that the court case will produce good result. In the mean time if it is possible send this verbatim notes to all media, English, Sinhalese and Tamil for others to see. President is a man, who has no steady mind and when things go against his wishes he always gets up go away. It’s not a sign of responsibility. Insha Allah we’ll win, GO AHEAD.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All