Puttalam Online
other-news

சவுதி பெண்கள் வெளிநாடு செல்ல ஆண்களின் அனுமதி தேவையில்லை

  • 2 August 2019
  • 87 views

சவுதி அரேபிய பெண்கள் ஆண் துணை இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லலாம் என அந்நாடு அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என்று பல்வேறு கட்டுபாடுகள் உள்ளன. இந்நிலையில், விஷன் 2030 என்ற பெயரில் சவுதியை நவீனமாக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பெண்களை நியமித்தது உள்ளிட்ட விஷயங்கள் அங்கு பலத்த வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் அந்நாட்டுப் பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் தந்தை, கணவர் அல்லது குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருந்து வந்தது.

சமீபத்தில் சவுதியை சேர்ந்த இளம் பெண்கள் சிலர், அவுஸ்திரேலியாவுக்கும் கனடாவுக்கும் அடைக்கலம் கேட்டு சென்ற பின், இந்த விதிக்கு சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்நிலையில் இப்போது அந்த சட்டத்தை சவுதி அரசு நீக்கியுள்ளது.

21 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும், ஆண்கள் ஒப்புதல் இல்லாமல் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆண்கள் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Thanks: www.virakesari.lk


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All