Puttalam Online
current

புத்தளத்தின் பெருமை..! மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..!!

தற்பொழுது லண்டனில் வசிக்கும் புத்தளத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்க் சல்மான் பாரிஸ் (நளீமி) அவர்களின் புதல்வியான மனால் பாரிஸ் எழுதிய “The Boy in the Well – the Story of Prophet Joseph” நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

அஷ்ஷெய்க் சல்மான் பாரிஸ் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, Muslim Hands Sri Lanka வின் பணிப்பாளர் முஹம்மது மிஹ்ளார் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

I soft campus, Hallam city campus, Muslim Hands, School of Excellence, ImTs, EEC,  Silent Volunteers, Puttalam Islahiyya Ladies Arabic Collage ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஐக்கிய இராச்சியத்தின் St. Pauls Catholic school Leicester கல்லூரியில் 10 ஆண்டில் கல்வி பயிலும் மேற்படி the boy in the well – the story of prophet Joseph நூலின் இளம் ஆசிரியரான மனால் பாரிஸ், யூசுப் நபியின் வாழ்க்கை வரலாறுகளை மிகவும் ஆழமான முறையில் ஆய்வு செய்து  யாரும்  விளங்கிக் கொள்ளக் கூடிய எளிய  மொழி நடையில்  327 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலாக எழுதியுள்ளார்.

இதன்போது, நூலின் விமர்சன உரைகளை புத்தளம் Hallam City Campus பணிப்பாளர்  எஸ்.எம்.மபாஸ், கொழும்பு ILO Programme Officer ஏ.ஆர்.பர்ஸான், ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.எம்.ரபீக், ImTs பணிப்பாளர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட், புத்தளம் EEC பணிப்பாளர் ரிஸ்கியா ஆஷிக் ஆகியோர் நூல் பற்றிய விமர்சன உரையை நிகழ்த்தினார்கள்.

நூலின் முதல் பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, நூலாசிரியர் மனால் பாரிஸிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

ரஸீன் ரஸ்மின்


2 thoughts on “புத்தளத்தின் பெருமை..! மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..!!

  1. Mohamed SR Nisthar says:

    I’ve not read the book yet, nonetheless, I feel it’ll definitely give inspiration for youngsters as well as adults, who may have hidden talents. I wish all the very best for this 13 year little lady form the UK (rooted in Puttalam) to achieve more and more creative writing skills and experience to shape the human society and grab a place in the list of world class writers. May God bless you.

  2. A R Rizana Raheem (Mullai Rizana) says:

    congratulations

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All