Puttalam Online
regional-news

உடப்பு மீனவரின் சடலம் மீட்பு

  • 3 September 2019
  • 104 views

வடமராட்சி கிழக்கு – ஆழியவளை கடற்கரை பகுதியிலுள்ள வாடியொன்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆழியவலை பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் – உடப்பு பகுதியிலிருந்து ஆழியவளை பகுதிக்கு சென்று, அங்கு தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன​ர். உடப்பு 6 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 44 வயதான மீனவரே சடலமாக மீட்கப்பட்ட நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலதிக விசாரணைகளுக்காக சடலம் குறித்த பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Thanks: newsfirst.lk


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All