Puttalam Online
regional-news

மேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்

  • 9 September 2019
  • 856 views

புத்தளம் மாட்ட காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தில் மேலதிக காணிப் பதிவாளாரக கடந்த மூன்று தசாப்தங்களுக்கு அதிக காலம் சேவையாற்றிய திரு எஸ்.எம்.ஏ.எம். முஸம்மில்  வௌ்ளிக்கிழமை (08.09.2019) தனது சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.

புத்தளம் கண்டல்குடாவைச் சேர்ந்த திரு முஸம்மில் காணிப் பதிவகத்தில் மிகநீண்ட காலம் சேவையாற்றியவர் என்ற வகையில் காணிகள் தொடர்பான சட்ட ஆவணங்கள் மற்றும்  நொத்தாரிசு தொழில்துறை தொடர்பான ஆழ்ந்த அறிவையும் அனுபவத்தையும் கொண்டுள்ளார்.

தனது அலுவலகத்துக்கு வருகைதரும் சட்டத்தரணிகள், நொத்தாரிசு எழுதுவினைஞர்கள் மற்றும் பொதுமக்களை இன்முகத்துடன் வரவேற்று தனது சேவையை வழங்கிவந்த திரு முஸம்மில் அவர்கள் ஓய்வுபெற்று செல்வது புத்தள மாவட்ட காணிப்பதிவகத்துக்கும் பொதுமக்களுக்கும் ஈடுசெய்யமுடியாத இழப்பாகும் என பலராலும் தொிவிக்கப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All