Puttalam Online
funeral

ஷகீலா தா(d)த்தா உங்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக..!

  • 30 September 2019
  • 291 views

இஸ்லாஹிய்யாவின் முதல் பிரசவங்களில் ஒன்று இன்று இறை நாட்டத்தால் இறையடி எய்தியது.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே தீரும் எனும் விதி யாருக்கும் விலக்காகாது எனும் நிலையில் இதை பொருந்திக் கொண்டோம்.

நாற்பதுகளிலேயே நாற்பக்க சோதனைகளால் பீடிக்கப்பட்டு வாழ்கின்ற காலத்திலேயே அவரது வாழ்க்கை முற்றுப் பெற்று விட்டது.
قدر الله ما شاء فعل
என்றாலும் அவர் அங்கம் வகித்த அனைத்து அலகுகளிலும் அவருக்கு தனியான இடம் உண்டு.

குடும்பத்தில் ஓர் செல்லப் பிள்ளையாக அனைவரது உள்ளங்களிலும் இடம் பிடித்தார்.

சக பாடிகளுக்கு மத்தியில் பிரிக்க முடியாத தோழியாக காணப்பட்டார்.
நயம்பட நகைப்புடன் எதையும் முன்வைத்துப் பேசுவது ஷகீலா தாத்தாவின் தனிப் பண்பு.
யாவரது உள்ளத்திலும் அந்த புன்னகை முகத்துக்கு இடம் இல்லாமல் இருக்காது.

இஸ்லாஹிய்யாவின் முதல் தொகுதி மாணவியாய் இணைந்து கற்கை நெறியை நிறைவு செய்து இஸ்லாஹி பட்டம் பெற்றார்.

அதை தொடர்ந்து அதன் அலுவலக உதவியாளராக இணைந்து கொண்டார். அவரது நேர்த்தியான பேனா முனை இஸ்லாஹிய்யா நிர்வாகத்துக்கு வளம் சேர்த்தது.

அல் மத்ரஸதுல் இஸ்லாமிய்யாவில் அவரது பணி தொடர்ந்தது.
பிஞ்சு மனங்களுக்கு குர்ஆனை வரிவரியாக ஓதக்கற்றுக்கொடுத்தார்.

மாணவர்களின் உள்ளங்களிலும் பெற்றோர்களின் உள்ளங்களிலும் அவருக்கான தனி இடம் இருந்தது.
தானும் ஒரு மாணவனாக மாறி கற்பித்தலில் ஈடுபடுவார்.
அதே போன்று சக ஆசிரியர்கள் நிர்வாகத்தினர்கிடையே ஓர் இணைப்புப் பாலமாக செயற்பட்டார்.

மதிப்பிற்குரிய சகோதரர் அப்துர் ரஷீத் அவர்களின் நிர்வாகக் காலப்பகுதியில் அவரது சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்த பெருமை இவரையே சாரும்.
மத்ரஸாவின் வளர்ச்சியில் அயராது அர்ப்பணத்துடன் பணியாற்றியதுடன்,
மாறி வரும் கலாச்சார சூழ்நிலைகளுக்கேற்ப கற்பித்தலிலும் கற்றல் சூழலிலும் மாற்றங்கள் வரவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினார்.
ரமழான் கால சுவனத் தென்றல் போட்டிகளின் போது இரவு பகல் பாராது உழைத்தார். அதன் போது வரும் அனைத்து சவால்களையும் மலர்ந்த முகத்துடன் எதிர்கொண்டார்.  இது மத்ரஸா இஸ்லாமிய்யாவின் பொற்காலம்.

தொடர்ந்து மத்ரஸாவின் உதவி அதிபராக இருந்து மத்ரஸாவின் நிர்வாகத்திற்கும், ஆசிரிய, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சேவையாற்றி வந்த நிலையில்; தனக்கு ஏற்பட்ட அசௌகரியங்களால் பணியை நிறுத்திக் கொண்டார்.

குர்ஆனை திறந்து ஓதத் தொடங்கும் ஒவ்வொரு பிஞ்சும் ஷகீலா முஅல்லிமாவுக்காக கரம் ஏந்தும் என்பது நிச்சயம்.
இறைவன் அவருக்கு வழங்கிய அருள்களை அவனுக்காகவே செலவிட்டு சென்று விட்டார்.

அவரது பிரிவால் துயர் உரும் அவரது குழந்தை செல்வங்களுக்கு அல்லாஹ் ஆறுதல் வழங்குவானாக.

அந்த தாயின் பணி சுமந்த வாரிசுகளாக அவர்களை ஆக்கிவிடுவானாக.

அவரது முன்மாதிரிகளை பின்பற்றி கற்பித்தல் பணியை தொடருவோராக ஏனையோரை ஆக்கிவிடுவானாக.
அவரது பவவீனங்களைப் பொருந்தி அவர் எதிர்பார்த்துக் காத்திருந்த உயர்வான நிரந்தரமான வாழ்க்கை யை வல்லநாயன் அவருக்கு வழங்கி வைப்பானாக.

MH Mazhara
26.09.2019


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – What Next…..?

  • Thursday,9 Jan 2020
சுவடிக்கூடம்View All