Puttalam Online
regional-news

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி திருவிழா

ரூஸி சனூன் புத்தளம் 

புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள பெரிய கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி திருவிழாவையொட்டிய ஆரம்ப நாளான கிரியாரம்ப நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (29) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 .
பண்டைய காலம் தொட்டு முதல் நாள் உற்சவத்தை நடாத்தும் புத்தளம் நடராஜதேவர் குடும்பத்தினர் புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள தமது வியாபார நிலையத்திருந்து அம்பாளுக்கு பட்டு சாத்தும் பொருட்டு மங்கள வாத்திய இசை சகிதம் சீர் வரிசை கொண்டு சென்றனர்.
 .
ஞாயிற்றுக்கிழமை (29) காலை ஆலய வளாகத்தில் கொடியேற்றத்துடனும், காப்பு கட்டுதலுடனும் திருவிழா ஆரம்பமாகியதோடு அம்பிகைக்கு அபிஷேகமும் வசந்த மண்டப பூஜையும் இடம்பெற்றது.
 .
விஷேட பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவதத்துவ கிரியா ஜோதி சிவஸ்ரீ ஜே.பாலகிருஷ்ண குருக்கள், உதவி குருமார்களான பிரம்ம ஸ்ரீ சி.விஜயகுமார சர்மா, பிரம்மஸ்ரீ க.சிவமஹிலோசன் சர்மா ஆகியோர் நடாத்தியதோடு மங்கள வாத்தியம் புசல்லாவ நட்சத்திர பேரவை சண்முகராஜா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
 .
WAK
 .


One thought on “ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி திருவிழா

  1. Suresh says:

    புத்தளம் மாரி அம்மன் கோவிலையும், அதன் ஒரு விழாவையும் பதினோரு வருடங்களின் பின் பார்க்கிறேன். நன்றி புத்தளம் ஒன்லைன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All