YSF அமைப்பினால் திறந்த ‘போலிங்’ நிகழ்வு ஒன்று அண்மையில் கத்தார் ‘Bowling Center’ ல் அண்மையில் நடைபெற்றது.
அமைப்பின் புதிய முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம், வெளியூர்களை சேர்ந்த அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பலரும் கலந்து கொண்டு புதுவித அனுபவத்தை பெற்றுக்கொண்டனர்.
பங்குபற்றியவர்களில் அதிகூடிய புள்ளிகளை பெற்றவர்களான பாரிஹ், ரஸ்மி, அதீக் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் பெற்றுக்கொண்டனர். வெற்றியாளர்களுக்கு கிண்ணம் மற்றும் வவுச்சர் வழங்கிவைக்கப்பட்ட அதேவேளை மூத்தவர்களுக்கு மத்தியில் விளையாடிய சிறுவர் ஒருவருக்கு ஆறுதல் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இப்புதிய முயற்சியை பாராட்டிய அனைவரும் இதுபோன்ற நிகழ்வுகளை இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உற்சாகம் தந்தமை குறிப்பிடத்தக்கது.
WAK