Puttalam Online
current

ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் இசற்.ஏ.சன்ஹீர் அவர்களுக்கு புத்தளம் வலய தமிழ் பாடசாலைகள் ஏற்பாடுசெய்த மணி விழா

  • 18 October 2019
  • 481 views

-க.மகாதேவன்-உடப்பு-

புத்தளம் வலய தமிழ் பாடசாலைகள்  தமிழ் அதிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா (மணி விழா) நிகழ்வொன்று ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் (10) திகதி இடம்பெற்றது.
புத்தளம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்) இசற்.ஏ.சன்ஹீர் அவர்கள் தமது 60 வது வயதில் கல்விச் சேவையில் 34 வருடங்கள் நிறைவு  செய்து அண்மையில்  ஓய்வு பெற்றதையிட்டு இந்த நிகழ்வு (10) இடம்பெற்றது. இதில் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. டபில்யு.பி.எஸ்.கே. விஜேசிங்க மற்றும் விழா நாயகன் திரு. இசற்.ஏ.சன்ஹீர் ஆகியோா் உரையாற்றுவதையும் அவருக்கு  கிரீடம் அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் கலந்து கொண்ட அதிபர்களையும் படங்களில் காணலாம். அத்துடன் திரு. இசற்.ஏ. சன்ஹிர் அவர்களின் கல்விப் பணி தொடர்பான சஞ்சிகை (தடம்) ஒன்றும் இந்நிகழ்வில் வௌியிட்டு வைக்கப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All