Puttalam Online
regional-news

கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

  • 21 October 2019
  • 296 views

ரூஸி சனூன் புத்தளம்
புத்தளம் வடக்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வுகள் அண்மையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.கே. நயீமுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.பீ.எஸ்.கே. விஜேசிங்க கலந்து கொண்டார். பாட இணைப்பாளர் வீ. அருணாகாரன், வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.அஸ்கா ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

க.பொ.த. உயர்தரம், சாதாரண தரம், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்தி அடைந்தவர்கள்,

தவணை பரீட்சைகளில் கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள், சிறந்த துலங்களை வெளிப்படுத்திய 113 மாணவர்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் முன்னுரிமை வழங்கிய மாணவர்கள் இதன்போது  பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், மாஹிர் பவுண்டேஷன் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All