Puttalam Online
regional-news

மானிங்கல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வரலாற்று சாதனை

  • 21 October 2019
  • 183 views

ரூஸி சனூன் புத்தளம்
சிலாபம் துன்கன்னாவ மானிங்கல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் 85 வருட கால வரலாற்றில் முதல் தடவையாக ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 13 மாணவர்கள் சித்தியடைந்து சாதித்திருக்கிறார்கள்.

இதில் எம்.என். சாபித் என்ற மாணவர் 179 புள்ளிகளைப் பெற்று சிலாபம் வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். எம்.ஆர். ஆயிஷா 153 புள்ளிகளை பெற்றுள்ளார்.

இது தவிர எம்.ஐ.எம்.பரூஜ்,  எம்.ஆர்.எப். சிம்லா, எம்.என்.எப்.நிஸ்மா,  எம்.எச்.சமஹா, எம்.எச்.சம்ஹா, எம்.எஸ்.எப்.சிம்ரா, எம்.ஐ.எம்.இன்பா, ஆர்.ரீமா செய்னப், எம்.ஐ.இஸ்ரா, எம்.ஏ.ஆயிஷா, எம்.எப்.பஹ்மா ஆகியோரும் சித்தி அடைந்துள்ளனர்.

பாடசாலை அதிபர் ஆர்.எம்.இல்யாஸ், பிரதி அதிபர் எம்.ஐ.எம்.ரினூஸா ஆகியோரின் வழிகாட்டலில், ஐந்தாம் தர பொறுப்பாசிரியர் எஸ்.ஏ.பஸ்லுர் ரஹ்மானின் தீவிர முற்சியின் பலனாக இந்த வரலாற்று வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதே வேளை குறித்த இந்த மாணவர்களை முதலாம், இரண்டாம், மூன்றாம் தரங்களில் ஆசிரியை ஏ.டீ.எப். சுசைனா வழி காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All