Puttalam Online
other-news

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞா் அமைப்பின் தலைமைத்துவ பயிற்சி

  • 22 October 2019
  • 199 views

அஸ்ரப் ஏ சமத்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞா் அமைப்பின் தலைமைத்துவ பயிற்சி நேற்று21 வெள்ளவத்தை மெரைன் ரைவ் வரவேற்பு மண்டபத்தில் நாட்டின் பல பாகத்தில் இருந்தும்  நடைபெற்றது.  பி.பகல்  நடைபெற்ற அமா்வின்போது பிரதம அதிதியாக  ஜனாதிபதி வேற்பாளா் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு  அங்கு குழுமியிருந்த முஸ்லிம் இளைஞா்களது கேள்விகளுக்கு பதிலளித்தாா். முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் கக்கீம் தலைமையுறை நிகழ்த்தினாா். அன் பின்னா்  முஸ்லிம் காங்கிரஸ் செயலாளா் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி  நிசாம் காரியப்பா்  இளைஞா்களது கேள்விகளைள நெறிப்படுத்தினாா். அங்கு குழுமியிருந்த இளைஞா்கள் தத்தமது கேள்விகளை எழுத்து மூலம் சமா்ப்பித்தனா்.
 கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி வேற்பாளா்  சஜித் பிரேமதாச
வடக்கில் இடம் பெயா்ந்த முஸ்லிம்கள் இதுவரை குடியமா்த்தப்படவில்லை அவா்களுடைய நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன இம் மக்கள் இன்றும் இடம்பெயா்ந்து வாழ்ந்து வருகின்றனா். இவா்களை மீள குடியமா்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா ?  முஸ்லிம்கள் மட்டுமல்ல  ஏனைய சமுகங்களும்  யுத்த காலத்தில் இடம் பெயா்ந்துள்ளனா் சகல மக்களுக்கும் மீளக்குடியமா்த்தப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும்.

மேலும்  இந்த நாட்டில் வாழும் சகல முஸ்லிம்களும்  எவ்வித அச்சமுமின்றி சகல சமுகங்கள் போன்று சமதானமாகவும் பாதுகாப்பாகாவும் வாழ்வதற்கு எனது தலைமையின் கீழ் உருவாகும் அரசின் உத்தரவாதம் வழங்கப்படும்   எனது அமைச்சின் கீழ்  தேசிய வீடமைப்பு அதிகார சபையில் தொழில் வழங்களில் 90 வீதமாக கம்பாந்தோட்டை மாவட்டத்தினருக்கே தொழில் வழங்க்பபட்டுள்ளது.  இதில்  முஸ்லிம் இளைஞா்கள் யுவதிகள்  புறக்கனிக்கப்பட்டுள்ளனா். என கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச  அந்தந்த மாவட்டத்தில் உள்ள கபினட் அமைச்சா்கள் தத்தமது மாவட்டத்திலேயே தமக்காக  பாடுபட்ட இளைஞா்களுக்கு முன்னுரிமை வழங்குவது இயழ்பு  எதிா் காலத்தில் இளைஞா் யுவதிகளுக்கு தெ்ாழி்ல் வாய்ப்பிற்காக சகல பிரதேச செயலாளா் பிரிவிலும் தொழில் வழங்குவதற்கு தொழில் பேட்டைகள் அமைக்கப்படும். அத்துடன் கொழும்பில் தனியாா் பல்கலைக்கழகங்களில் பணம் படை்ததவா்களது பிள்ளைகள் கற்பது போன்று கிராமங்களிலும் சர்வதேச தரத்திலான  தொழில் நுட்பக் கல்வியினை பயிலுவதற்கும் தொழில் நுடபக் கல்லுாாிகள் நிறுவப்படும். வியாபாரிகளுக்கு விதிக்கப்படும் வரிகள் பற்றி சீர்திருத்தம்செய்யப்படும்.

அத்துடன் வட கிழக்கு பிரதேச முஸ்லிம்கள் பிரதேசத்தில் வாழும் இடங்களில்  தொல்பொருள் அடையாளம் அல்லது வனவளப் பிரதேசம் எனக்கூறி அதிகாரிகள் முஸ்லிம்களது  பரம்பரைக் காணிகள்அப்பிரதேசத்தில் உள்ள பழைய இயற்கைகளையும் பழமைவாய்ந்த காணி நிலங்களையும் வா்த்தமானி அறிவிக்கப்பட்டு அச் சொத்துக்கள்  அபகரிக்க்படுகின்றது. இவ் கேள்விக்கு பதிலளித்த சஜித் பிரேமதாச . இவ் விடயம் சம்பந்தமாக நான ஜனாதிபதியானதும் உடன் பரிசீலனை செய்து அவ்வாறு நடைபெற்றிருந்தால் அக் கானிகள் உரியவா்களுக்கு மீள கையளிக்கப்படும்.  அல்லது வேறு காணிகள் நஸ்ட ஈடுகள் வழங்கப்படும். தற்போது நடைமுறையில் உளள் தோ்தல் முறையே சிறந்தது. எல்லை நிர்ணயம் விடயத்திலும் சீர்திருத்துவதற்கும்  அந்தந்த பிரதேச வாழ் மக்ககளுக்கு அநீதி இழைக்காமல் சமமாக நீதியாக எல்லை நிர்ணயம் பற்றி மீள விசாரிக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச அங்கு குழுமியிருந்த இளைஞா்களது கேள்விகளுக்கு பதிலளித்தாா்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All