Puttalam Online
regional-news

வெற்றிகரமாக நடந்துமுடிந்த “அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா?” நூல் அறிமுக விழா

  • 23 October 2019
  • 444 views

ஜாமிஆ நளீமியாவின் முன்நாள் விரிவுரையளாரும் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மிஷ்காத் நிறுவனம் மற்றும் அல் குர்ஆன் கற்கைகளுக்கான திறந்த கல்லூரி என்பவற்றின் ஸ்தாபகருமான  உஸ்தாத் மன்ஸூர்  அவர்கள்  எழுதிய “அல்குர்ஆன் வன்முறையைத்  தூண்டுகிறதா?” எனும்  நூல்  அறிமுக விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (20/10/2019) புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் காலை அமர்வுக்கு இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் முனீர் அவர்கள் தலைமை வகித்ததுடன் உஸ்தாத் மன்ஸூர்  அவர்களின் விரிவுரை மற்றும் கலந்துரையாடலும் இடம்பெற்றது. அதேபோன்று மாலை நிகழ்வில் மிஷ்காத் நிறுவன தலைவர் அஷ்ஷெய்க்​ அப்துர் ராஸிக் நளீமி அவர்களின் அறிமுக உரையுடன் உஸ்தாத் மன்ஸூர்  அவர்களின் விரிவுரை மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இரண்டாம் அமர்வு நிகழ்வுகளை அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் நளீமி தொகுத்து வழங்கினார்

அரபுக்கல்லூரி மாணவர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், அதிபர்கள்,  புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் இந்நிகழ்வில் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

மக்ரிப் தொழுகையின் பின்னர் புத்தளம் பிராந்திய றாபிதா நளீமிய்யீன் (பழைய மாணவர் அமைப்பு) சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்நிகழ்விலும் உஸ்தாத் மன்ஸூர்  அவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கியதுடன் சுமார் 30 நளீமியா பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All