Puttalam Online
funeral

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் – ராவுத்தர் அப்துல் ஒபூர் காலமானார்

  • 30 October 2019
  • 230 views

புத்தளம் பெரிய பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த பெரியபள்ளியில் மிக நீண்டகாலம் சேவை புரிந்த ராவுத்தர் அப்துல் ஒபூர் மாமா ( 87 வயது) நேற்று 2019/10/29 காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா புத்தளம் வெட்டுகுளம் மையவாடியில் நேற்றுக் காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

காலம் சென்ற அப்துல் ஒபூர் மாமா தனது வாழ்வில் நீண்ட காலமாக புத்தளம் பெரிய பள்ளிவாசலின் பணியாளராக கடைமையாற்றி தனது மறுமை வாழ்வுக்கான கட்டிச் சாதனத்தை சேகரித்து நிழலே இல்லாத மஹ்ஷர் மைதானத்தில் அர்ஷின் நிழல் பெறும் ஏழு கூட்டத்தாரில் மஸ்ஜிதோடு உள்ளம் தொடர்புள்ளவருக்கும் தனது நிழலை அல்லாஹ் வழங்கும் நாளில் ஓபூர் மாமாவும் மஸ்ஜிதோடு தனது உள்ளத்தை இணைத்து வாழ்ந்த காரணத்தால் அவருக்கும் அந்த பாக்கியத்தை கொடுக்க வேண்டும்.

உலகில் வாழும் போது மனித நேயத்துடனும் மறுமைக்கான நல்லரங்களை சேகரித்த நிலையிலும் வாழும் போது மண்ணறைக்கு நாம் புரிந்த நன்மைகள் நம்மோடு துணை நிற்கும் என்றும் மிக ஆழமாக தெளிவு படுத்தி தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும் – அல்ஹம்துலிலாஹ்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாவங்கள் அற்ற நிலையில் சுவனத்தை அடையும் பாக்கியத்தை தந்தருள்வானாக!

✍ ஷாபி ஸஃதி


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All