Puttalam Online
art-culture

ஜனாதிபதி தேர்தல்… எப்போதோ தீர்மானித்த தீர்ப்புகள்…!

  • 4 November 2019
  • 230 views

ஜனாதிபதி தேர்தல்…
எப்போதோ தீர்மானித்த தீர்ப்புகள்…!

குப்பை பிரச்சினைக்காக குவியும் குரல்களே…
அதுபற்றிய கலந்துரையாடலுக்காக இன்று எமை அணுகும் அரசியல் பிரதானிகளே..
ஐஸாக்முல்லாகு ஹைரன்..!

தேர்தல் தினமானாலும்… வாக்களிக்க ஒரு நிமிடம் முன்பானாலும்.. வாக்களித்த பிரகானாலும்கூட…
எமது பிரச்சினை தீர்க்க யார் அழைத்தாலும் நாம் வருவோம்…
எம்மிடம் ego கிடையாது… கட்சியும் colour உம் காலமும் பார்த்து கைதூக்கும் கறுப்பு மனம் கிடையாது…
எனவே எப்போதும் வருவோம்…!

எனினும்… ஒரு கேள்வியை கேட்காமல் எமது நெஞ்சு ஆறாது…!!
“ஜனாதிபதி தேர்தல்… திகதி அறிவிப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பு வரை… எங்கிருந்தீர்கள் நீங்கள்…?”

உங்களை ஏற்கனவே நாம் சந்தித்திருக்கிறோம் ஞாபகம் இருக்கிறதா…?
கட்டுக்கட்டாய் எம் கண்ணீரை ‘மஹஜர்’ எழுதிக் கையளித்திருக்கிறோம் நினைவிலேனும் இருக்கிறதா…?

பிழையாகச் சொல்கிறீர்கள்… இது முதலாவது அல்ல – இரண்டாம், மூன்றாம், அல்லது நான்காம் சந்திப்பு…!
நீங்கள் எதுவுமே செய்யாமல் மீண்டும் சந்திக்கும் 0 சந்திப்பு…!!
தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தில் just காரிலிருந்து ஓர் இறங்கி ஏறும் நிகழ்வு..!

மடையர்கள் என நினைத்துவிடவேண்டாம்…

‘தேர்தல் காலத்தில் அனைத்தும் temporary’ என்ற கொடுமையை பல முறை அனுபவித்துவிட்ட அனுபவங்களோடுதான் உங்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறோம்…!
‘மேடையில் வீற்றிருப்பவை make up முகங்கள்’ என்ற விளக்கத்தோடுதான் கதைத்துக்கொண்டிருக்கிறோம்…!!

200 நாள் நாம் வீதியில் நின்றபோது நீங்கள் செய்த சேவையும்….
“செவிட்டுப் பாராளுமன்றம்” என்ற சிவப்பு மடலுக்கு நீங்கள் அனுப்பிவைத்த ஊமை பதிலுமே.. உங்கள் உண்மை முகத்தின் அடையாளம்…!

எமது வாக்குகளை நாம் தீர்மானித்த நாள்…
தேர்தலுக்கு திகதி அறிவிப்பதற்கு முன்பு என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்…!!

உங்கள் உண்மையான உரைகளை, உண்மையான தேர்தல் விஞ்ஞாபனத்தை, நிஜமான நிலைப்பாடுகளை…
களத்திலே தெளிவாக பார்த்துவிட்ட எமக்கு,
இப்போது புதிதாக, எழுதிவாசிக்கும் உரைகளும் வெறும் காகித விஞ்ஞாபனங்களும், கர்ஜிக்கும் நிலைப்பாடுகளும் தேவையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்…!!

பாராளுமன்றத்தில் மனிதர்களைத் தேடி களைத்துப்போன ஒரு சமூகம் நாம்…!
மேடைப்பேச்சுக்கு கால்கடுக்க நிற்பதும்… அழகான பொய் ரசித்து அடுத்த நாள் புள்ளடியிடுவதும் இனி out of fashion…!!

இத்தனை வருடம் live ஆகப் பார்த்த உங்களை… சில வாரங்களாக முகமூடியுடன் பார்க்கயில் உண்மையில் அழகாகத்தான் இருக்கிறது…!
அலங்கரித்து வைத்திருக்கும் மணப்பெண்ணைப்போல…!!

முடிந்தால் ஒன்று செய்யுங்கள்..
இந்த முகமூடிகளையே இனி முகங்களாக்கிக்கொள்ள முயற்சியுங்கள்…!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக இப்போதிருந்தே வாழ ஆரம்பியுங்கள்….

இறைவன் நாடினால்…
அடுத்த தேர்தலில் அள்ளி வழங்குகிறோம்..!
வார்த்தைக்கு அல்ல.. உங்கள் வாழ்க்கைக்குப் புள்ளடியிட்டு சாட்சி சொல்லுகிறோம்..!!


புத்தளம் மரிக்கார்
03-11-2019
#cleanputtalam


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All