புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் அமைப்பின் கடல்கடந்த முதலாவது கிளையாக கத்தார் நாட்டில் அண்மையில் உதயமானது.
கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பு (PAQ) இவ்கிளையினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. பல்வேறு இடங்களில் வசிக்கும் புத்தளம் ஸாஹிராவின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வந்திருந்தவர்களில் 11 பேர் நிர்வாகக்குழுவுக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். நிர்வாகக்குழு கூட்டம் கூட்டப்பட்டதன் பிற்பாடு அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.
PAQ அமைப்பின் நடப்பாண்டு தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் PAQ மற்றும் PPA ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் பழைய மாணவர்களுக்கு மத்தியில் விளக்கமளிக்கப்பட்ட அதேநேரம் விருந்தினராக முஹ்ஸி ஆசிரியரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.