Puttalam Online
regional-news

புத்தளம் பாத்திமா, சாந்த அன்ரூஸ் கல்லூரிகளுக்கு விஷேட விடுமுறை

  • 5 November 2019
  • 353 views

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, சாந்த அன்ரூஸ் மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு விஷேட விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் மத்திய நிலையங்களுக்காக பயன்படுத்தும் மேற்படி பாடசாலைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பாடசாலைகளில் 16 ஆம் திகதி வாக்கு எண்ணும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 16 ஆம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All