இலங்கையின் ஜனாதிபதியைத் தெரிவு செய்தற்கான சட்டத்தின் பிரகாரம் நேற்று 13 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரப் பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டன. எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குச் சாவடிகளாக உபயோகப்படுத்த நாட்டிலுள்ள சில பாடசாலைகள் இன்றைய பாடசாலை நடவடிகைகள் முடிந்ததும் அப்பகுதி கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. மேலும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் எனவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளமையம் குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் அனைத்தும் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
சமூக வலைத்தளங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் அவதானிக்கப்படுகின்றன. சட்டத்தை மீறும் செயற்பாடுகள் தொடர்பில் கண்டறியப்பட்டால், அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அவ்வாறான சட்டவிரோதப் பதிவுகளை பதிவேற்றும் நபருக்கு எதிராகவும் அந்த பதிவினை பகிரும் நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இந்தியா, பூட்டான், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, தென் கொரியா, தென்னாபிரிக்கா ஆகிய 7 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 120 வௌிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதனைத் தவிர வெவ்வேறு சர்வதேச அமைப்புகளை சேர்ந்த கண்காணிப்பாளர்களும் இலங்கை வந்தடைந்துள்ளனர். Paffrel மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
Share the post "நேற்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரப் பணிகள் அனைத்தும் நிறைவு"