Puttalam Online
other-news

ஏழாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான எட்டாவது வாக்களிப்பு ஆரம்பமாகியது

  • 16 November 2019
  • 192 views

இலங்கையில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று  நடைபெறுகிறது. இத்தேர்தலுக்காக 12,845 வாக்களிப்பு நிலையங்களில் சுமார் 3 இலட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 411 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறுகின்றது. தேர்­தல்கள் தொடர்­பி­லான பாது­காப்பு மற்றும் அது ­சார்ந்த பணி­களில் 60 ஆயி­ரத்து 175 பொலிஸார் ஈடு­ப­டுத்­த­ப்பட்டுள்ளனர். அத்துடன் 3500 பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் நேர­டி­யா­கவே பாது­காப்பு  கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட்டுள்ள­துடன் சிவில் பாது­காப்பு படை­யினரும் பாது­காப்பு பணி­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட்டுள்ளனர். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள தேர்தல் தொகுதி நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியாகும்.

வாக்களிப்புக்காக தேசிய அடையாள அட்டை, அல்லது வேறு ஏற்றுக் கொள்ளக்கூடிய அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள், தமது பெயர், வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்பட்டிருக்குமாயின் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும்
.
இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் நிலையில் அவர்கள் அனைவரும் தேர்தல் பிர­சா­ரத்­துக்கு செல­விட்­ட­தாக மதிப்­பி­டப்­படும் மொத்த தொகை 10 ஆயிரம் மில்­லியன் ரூபா­வாகும். அதன்­படி ஒரு வாக்காளர் தொடர்பில் வேட்­பா­ளர்கள் செல­விட்ட தொகை 625 ரூபா என மதிப்­பீடு செய்­யப்பட்­டுள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான மொத்த செலவு 5500 மில்­லியன் ரூபா எனவும் அத­ன­டிப்­ப­டையில் ஒரு வாக்­கா­ள­ருக்­காக இம்­முறை தேர்­தல்கள் ஆணைக்குழுவால் 344 ரூபா செல­வி­ட­ப்படு­வ­தாகவும் மதிப்­பீடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஒரு வாரம் செல்லும் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும். வேட்பாளர் பயணிக்கும் வாகனத்தில் மாத்திரமே போஸ்டர்களை ஒட்ட முடியும். அதுவும் வரையறுக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு நிலையம், வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் வேட்பாளர்களுக்கு வாக்கு திரட்டும் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. அத்துடன், யாராவது ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என அழுத்தம் விடுக்கவும் முடியாது. 500 மீட்டருக்கு அப்பாலும் அவ்வாறு செயற்பட முடியாது.

விதிவிலக்கான வாய்ப்புகள் தவிர்த்து, வாக்காளர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லல், வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வீடுகளுக்கு அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்லல் என்பன முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது சட்டப்பூவ அனுமதி பெற்ற பஸ்களில் பயணிக்க முடியும். குடும்பங்கள் தமது வாகனங்களில் செல்ல முடியும். அங்கவீனமடைந்தவர்களை வாகனங்களில் வாக்களிப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்.

வழமையாக வாக்களிக்கும் நடவடிக்கைகள் மாலை 4 மணிக்கு நிறைவடைகின்ற நிலையில், இம்முறை மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்பின் முதலாவது முடிவை நள்ளிரவிற்கு முன்னதாக வழங்க முடியும் எனவும் தொகுதிவாரியான முடிவுகளின் முதலாவது முடிவை அதிகாலை 2 மணியளவில் வழங்க முடியும் என்றும் காலை 8 மணியாகும்போது அரைவாசிக்கும் மேல் முடிவுகளை வௌியிட எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

www.news.lk தளத்தில் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All