Puttalam Online
current

ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு

  • 17 November 2019
  • 130 views

இலங்கை ஜனாநாயக சோசலிஷ குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று மாலை அறிவித்துள்ளார்.

நேற்று (16) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் செல்லுபடியான வாக்குகளில் 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றார். இது மொத்த வாக்குகளில் 52.25 சதவீதமாகும்.கோட்டாபய ராஜபக்ஷ தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசவிலும் பார்க்க 13 இலட்சத்து 60 ஆயிரத்து 16 வாக்குகளை மேலதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இதுவரையில் வேட்பாளர் ஒருவருக்கு கிடைத்த ஆகக்கூடிய வாக்குகள் இது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் 55 இலட்சத்து 64 ஆயிரத்து 239 (41.99 சதவீதம்)

கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை (18) அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதுடன் தமது கடமைகளை அநுராதபுரம் றுவான்வெலிசயவிற்கு அருகாமையில் ஆரம்பிக்கவுள்ளார்.

தனது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்படப்பட்டிருந்த அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்பதாக புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திரமும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தாம் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

வாக்களித்த வாக்காளர்களுக்கும், எதிராக வாக்களித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், அனைவரதும் ஜனாதிபதி என்ற ரீதியில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் இன, மத வேறுபாடின்றி சேவை புரிவதற்கு தாம் அர்ப்பணித்திருப்பதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All