Puttalam Online
current

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

  • 19 November 2019
  • 100 views

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (19) முற்பகல் 10.30 மணியளவில்  ஜனாதிபதி செயலகத்தில் பீரங்கி முழக்க மரியாதைகளைத் தொடர்ந்து சுபவேளையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் செயலாளராக திறைசேரி, நிதி அமைச்சு மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் முன்னாள் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, திறைசேறியின் செயலாளராக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோருக்கான நியமனக் கடிதங்களையும் ஜனாதிபதி கையளித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்­கையின் ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக நேற்று வர­லாற்று சிறப்புமிக்க அநு­ரா­த­புரம் ருவன்­வெ­லி­சாய வளா­கத்தில் பதவியற்றமை தெரிந்ததே. தேர்­தலில் வெற்றி அறி­விக்­கப்­பட்­ட­வுடன் உரை­யாற்­றிய கோத்தாபய ராஜ­பக்ஷ அவருக்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் வாக்­க­ளித்த அனைத்து மக்­க­ளுக்கும் பார­பட்­ச­மின்றி சிறந்த சேவை­யாற்­றுவதாகவும் மக்கள் தன்­ மீது கொண்ட நம்­பிக்­கையை முழு­மை­யாக நிறை­வேற்­றுவதாகவும் கூறினார். மேலும் தேர்தல் பிர­க­ட­னத்தில் முன்­வைத்த விட­யங்கள் அனைத்தும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் எனவும் அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற அடிப்­ப­டையில் எவ்­வித பார­பட்­சமுமின்றி நடத்­தப்­ப­டு­வார்கள் என்றும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All