Puttalam Online
other-news

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார்

  • 19 November 2019
  • 88 views

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தனது 88 ஆவது வயதில் இன்று மாலை கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். 1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்த சிரேஷ்ட அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பளை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் அரச காணி, விவசாயம் மற்றும் வன வள அமைச்சராக செயற்பட்டதுடன், விவசாயம், உணவு மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும், தபால், தொலைத்தொடர்புகள் மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சராகவும் பெருந்தோட்ட அமைச்சராகவும் பல பதவிகளை வகித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக டி.எம்.ஜயரத்ன பதவியேற்றதுடன் புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All