Puttalam Online
health

புத்தளம் தள வைத்தியசாலை ஏற்பாடுசெய்த 2019 உலக நீரிழிவு தின நிகழ்வுகள்..

  • 27 November 2019
  • 315 views

2019 – உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு “உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்போம்” என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று 2019.11.27 ஆம் திகதி புத்தளம் நகரில் இடம்பெற்றது.

புத்தளம் தள வைத்தியசாலையின் தொற்றா நோய்களுக்கான பிரிவு (Non Communicable Disease Unit) ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் புத்தளம் தள வைத்தியசாலை மருத்துவர்கள், தாதிமார் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

புத்தளம் தளவைத்தியசாலையிலிருந்து பேரூந்து நிலையம் வரை பாதயாத்திரை இடம்பெற்றதுடன், அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் அதனைக் கட்டுப்படுத்தல் மற்றும் முகாமைசெய்தல்​  தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தெருக் கூத்து இடம்பெற்றது. பின்னர் புத்தளம் மாவட்டச் செயலக ஊழியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் பல புத்தளம் மாவட்டச் செயலக வளாகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியும் புகைப்படங்களும் – முகம்மது அப்லல்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All