Puttalam Online
social

உயிருடன் இருப்பவர்களிடம் ஒரு campaign விண்ணப்பம்..!

  • 27 November 2019
  • 523 views

உயிருடன் இருப்பவர்களிடம்
ஒரு campaign விண்ணப்பம்..!
———————–

உலக நிலவரங்கள்… தேர்தல்கள்.. அவ்வப்போது வரும் issueக்கள்…
எம்மை எமது பிரதான சிந்தனைகளில் இருந்து திசை திருப்பிவிடுகிறது பார்த்தீர்களா…?

பழகப்பழக பலதும் பழசாவதுபோல்…
உயிராபத்துகள்கூட… உணர்வுகளில் இருந்து மங்கப்பார்ப்பதை உணரமுடிகிறதா..?

நண்பர்களே…

உயிரோடிருக்கும் உங்கள் குழந்தைகளின் முகத்தை ஒருமுறை பாருங்கள்…
அவர்கள் குடித்து வாழப்போகும் நீர் நிலைகளை கொஞ்சம் சுற்றிவாருங்கள்…
அன்றாடம் மீன் கொடுக்கும் அந்த கடலுக்குப்பக்கத்தில் சில நிமிடங்கள் நின்று கண்மூடிச் சிந்தியுங்கள்…

இவைகள் நஞ்சான ஊரில் உங்கள் பிள்ளைகளின் வாழ்வை கற்பனை செய்யுங்கள்…

கறுப்புக் காற்றில் இருமி இருமிச் சுவாசிக்கப்போகும்…
அந்த குருத்துகளின் எதிர்காலத்தை மனக்கண்ணில் நிறுத்துங்கள்…

உங்கள் மனசாட்சி பேசும்..,
நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் எனக் கேற்கும்…

சகோதரர்களே…
#cleanputtalam என்பது வேறு யாருமல்ல நீங்கள் தான்…! உங்கள் உள்ளத்தில் இருக்கும் உணர்வு எனும் உயிர்தான்..!
உங்கள் குழந்தைகள் நம்பியிருப்பது உங்களைத்தான்…!
அதோ அந்த பூங்காவில் அவர்கள் சிரித்த முகத்துடன் விளையாடிக்கொண்டிருப்பது…
“எனது வாப்பா எனது உம்மா என்னை கைவிடமாட்டார்கள்” என்ற நம்பிக்கையில் தான்…!!

எங்கோ ஒரு சிலர் இதனை அரசியலாக்க முயற்சிக்கலாம்…! எங்கோ ஒரு தனிமனிதப் பலவீனம் சிறிது சறுக்கியிருக்கலாம்…!
‘எங்கே ஒரு அவல் கிடைக்கும் சப்புவதற்க்கென்று’ சில whatsapp வாசிகள் காத்துக்கிடந்து கத்தலாம்…!
இவை அனைத்தும் எமது 4 வருடப் போராட்டத்தில் 1% வீதத்தை தாண்டுமா..? விதிவிலக்குகள் விதியாகுமா..?

அடைவுகள் ஆயிரம்…

நண்பர்களே… #cleanputtalam, பல நல்லுள்ளங்களைக் கொண்டிருக்கிறது…
விலைபோகாத மனிதர்களையும், மார்க்கத் தலைமைகளையும் கொண்டிருக்குக்கிறது…
நாட்டை மதித்து சட்டவரையறைகளுக்குள் வழிகாட்டும் சட்டத்தரணிகள் சங்கத்தை கொண்டிருக்கிறது…
பல லட்சம் பிரார்த்தனைகளை கொண்டிருக்கிறது…!!

உறங்கிவிடாதீர்கள்…! இந்தப் பயணத்தில் இப்போதே களைத்துப்போய்விடாதீர்கள்…!!
உங்கள் உதவிகள் தேவைப்படும் நேரத்தில் உணர்வுகளால் மரணித்து விடாதீர்கள்…!!
நாம் மௌனமாகி எவனும் எதையும் செய்யட்டுமென்று உங்கள் சந்ததியையும் அவர்களுக்காக நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கையும் நடுத்தெருவில் கைவிட்டுவிடாதீர்கள்…!!

புத்தளத்தை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு வேண்டுகோளை இன்று விடுக்கிறோம்…!

உங்கள் பங்களிப்பாய், மில்லியன் அல்ல, லட்சங்கள் அல்ல…!
ஒரு 1000 ரூபாயை பெரிய பள்ளி account இல் வழக்கு நிதிக்காக வைப்புச்செய்யுங்கள்..!!
(Mohideen Jumma Mosque – A/C 0010001152004 – Amana Bank, Puttalam Branch)
முடியுமாயின் #எனது_பங்களிப்பு என்ற #tag உடன் அந்த receipt ஐ அல்லது ஒரு post ஐ உங்கள் முகநூலில் பதிவுசெய்யுங்கள்..!!

வழக்கினால் மட்டுமே அருவக்காலு குப்பைகளை வேரோடு பிடுங்க முடியும்…!
3 மாதம் வந்தவற்றை 100 வருடங்கள் வராமல் தடுக்கமுடியும்…!
கொழும்புக்குப்பை மட்டுமல்ல எக்குப்பையும் தொடமுடியா பிரதேசமாக அந்த ஈரநிலத்தைக் காக்கமுடியும்…!!

இந்த 1000 ரூபா campaign இல் இதயத்தால் இணைந்துகொள்ளுங்கள்…
இது உங்கள் பிள்ளைக்கானது என்ற உணர்வுகொள்ளுங்கள்…
எவனோ எழுதிய எழுத்தென்று கட்டைவிரலால் கடந்து சென்றுவிடாதீர்கள்…!!
பணத்தை செலுத்திவிட்டு பதிவை share செய்யுங்கள்..!!

இந்த வேண்டுகோள், உங்களுக்கும் வந்ததல்ல… உங்களுக்கு வந்தது…!!

எதிர்பார்ப்புகளோடு…

#cleanputtalam
27-11-2019

#CP_1000RS_campaign


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All