Puttalam Online
art-culture

மழை ஒரு மாலை நேரக் கற்பனை…!

  • 9 December 2019
  • 269 views

மழை
ஒரு மாலை நேரக் கற்பனை…!
———————————————

ஜன்னலுக்கு வெளியே
ஒரு தீபாவளி…

காற்றை கழுவி விடும்
ஆச்சர்ய ஏற்பாடு..

சிரித்துச் சிரித்து விழும்
சில்லரைத் துண்டுகள்…

குருவிகளின் குளியல்…

கவிஞனின் நரம்பை நிரப்பும்
வெள்ளை பேனா மை..

மேகம் விடுதலை செய்யும்
தண்ணீரின் சுதந்திர தினம்…

நடுத்தெருவில் நின்று
நனைய அழைக்கும் நாவு…

நல்லவன் நேசிக்கும்
ஒரேயொரு போதைப்பொருள்…

தெருவிலும் அருவிகள்…

குளத்துக்கு வெளியே வரும்
மீன்களின் பண்டிகை…

தேநீரை இனிமையாக்கும்
தேகத்தின் தேசிய விழா…

கண்களை ON செய்யும்
காட்சிகளின் remote control…

மரங்களை குளிக்க வைத்து
மகிழ்ச்சியூட்டும் தாய்…

இலக்கியப் பொக்கிஷம்…

மண்ணுக்கு மட்டுமல்ல
மனதுக்கும் ரத்ததானம்…

இதயத்தின் இறுக்கங்களில்…
இயற்க்கை செய்யும்
சத்திர சிகிச்சை…

நீரின்
நீண்ட தூரப் பயணம்…

தொட்டுப்பார்க்க நெருங்கிவரும்
நட்சத்திரக் கூட்டம்…

அரசு அறிவிக்காத
ஊரடங்குச் சட்டம்…

ஆச்சரியம்…

அட – ‘பிஸி’ என்று சொல்லாமல்
கதைத்துக் கொண்டிருக்கிறோம்…!

இன்றுமட்டும்தான் எல்லோரும்
ஒன்றாக
வீட்டிலிருக்கிறோம்…!!


புத்தளம் மரிக்கார்
01-12-2019


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All