Puttalam Online
education

ஸ்ரீ ராஹுல முன்பள்ளியின் வருடாந்த கலை விழா நிகழ்வுகள்

  • 14 December 2019
  • 337 views

ரூஸி சனூன்  புத்தளம்
புத்தளம் வெளிவட்ட வீதி ஸ்ரீ விசுத்தாராம பௌத்த விகாரை வளாகத்தில் இயங்கும் ஸ்ரீ ராஹுல  முன்பள்ளியின் வருடாந்த கலை விழா நிகழ்வுகள் அண்மையில் (09) புத்தளம் நகர மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் வழிகாட்டலில் புத்தளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற இந்த முன்பள்ளியின் பொறுப்பாசிரியைகளான நிலங்கா தில்ருக்ஷி, உரேஷா மதுவந்தி, சக்காயா நெத்மினி ஆகியோரின் சிறப்பான நெறிப்படுத்தலில் முன்பள்ளியில் கல்வி பயிலும் 50 மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டினர்.

இந்நிகழ்வில் அதிதிகளாக வடமேல் மாகாண சபையின் முன்னாள் சபாநாயகர் சிந்தக அமல் மாயாதுன்ன, புத்தளம் பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் எல்.எஸ்.சிந்தக்க,  உப தலைவர் ரத்னபால, முன்னாள் உப தலைவர் டொனில் ரோபஸ், பொது முகாமையாளர் எஸ்.ஏ.எம். பளீல் உள்ளிட்ட பௌத்த, கிறிஸ்தவ சமய தலைவர்களும், புத்தளம் நகர இதர முன்பள்ளிகளின் ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.     

           


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – What Next…..?

  • Thursday,9 Jan 2020
சுவடிக்கூடம்View All