Puttalam Online
other-news

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விளக்கமறியலில்

  • 19 December 2019
  • 271 views

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (19) முற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டார். அவர் இன்று (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று நீதிமன்றத்துக்கு முன்னாள் அமைச்சர் அர்ஜுனன் ரணதுங்க உட்பட வேறு சில அமைச்சர்களும் சமூகமளித்திருந்தனர். கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் திரண்ட ஆதரவாளர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All