Puttalam Online
historical-notes

புத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – 06 கழுத்தணிகள்-2

  • 2 January 2020
  • 262 views

கழுத்தணிகள் – 2

1.கடுகுமணி

கடுகுமணி என்னும்போது கடுகைப் போன்ற சிறிய மணியெனக் கருதலாகாது. குண்டுமணியிலும் பெரிதாக பொன்னால் செய்யப்படும் மணிகள் இவைகள் மணிக்கோவைகள் பெரிய அளவிலும், சிறிய அளவிலும் அமையும்.உள் கழுத்துக் கொடியென்னும் ஆபாரணத்துக்கு மேலே அணிவார்கள்.

2.திருக்கண்டாமணி

உள் கழுத்துக் கொடிக்குக்கீழே அணியும் மணிக் கோவையாகும்.

3.உள் கழுத்துக்கொடி 

கீழே காட்டப்படும் ‘சவடி’ என்ற நகையை விட சிறிய உருவமுள்ளது. பொன்னாற்செய்யப்படும். பொன் கம்பியால் பின்னப்பட்டிருக்கும் கடுகுமணிக்கு கீழே அணியும் ஆபாரணமாகும்.

4.சவடி 

அகத்திக்காய் போன்ற வடிவுடைய பொன் கம்பியால் பின்னப்படும் ஆபாரணம் இதுவாகும் .

இன்னும் வரும் …


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All