Puttalam Online
regional-news

கத்தாரில் நம்மவர்கள் ஏற்பாடு செய்யும் உதைபந்தாட்ட நிகழ்வு

  • 2 January 2020
  • 193 views

கத்தாரில் வசிக்கும் இலங்கை கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நாளை (03-01-2020) வெள்ளிக்கிழமை ஸாஹிராவின்
 சொந்தங்கள் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்ட போட்டித்தொடர் ஒன்றையும் மற்றும் அணிக்கு 5 பேர்
கொண்ட 40 வயதுக்கு மேற்பட்ட்டவர்களுக்கான ஒரு கால்பந்தாட்ட தொடரையும் பெறும் விமர்சையாக முஐதர் விளையாட்டு 
மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிகழ்வை புத்தளம் ஸாஹிராவின் கால்பந்தாட்ட அணி ஏற்பாடு
செய்துள்ளது. இந்த நிகழ்வுக்கு கத்தார் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் சிறப்பு அதிதியாகவும், புத்தளத்தின் சமூகத்தின் நன்மைக்காக கத்தாரில் இயங்கும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் கத்தாரில் வாழும் அனைத்து இலங்கை உறவுகளும் குறிப்பாக புத்தளம் உறவுகளும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பு அழைப்பு விடுக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – What Next…..?

  • Thursday,9 Jan 2020
சுவடிக்கூடம்View All