Puttalam Online
regional-news

கடல் கடந்த நிகழ்வு – கத்தாரில் வித்தியாலயம் சஞ்சிகை அறிமுக விழா

  • 16 January 2020
  • 220 views

புத்தளம் கல்வி வலய அனைத்து தமிழ் மொழிப் பாடசாலைகள் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய, புத்தளம் நகரம் மற்றும் கிராமங்களின் ஆரம்பகால ஆசிரியர்கள் மற்றும் தற்போது கடமையாற்றும் சுமார் 2000 ஆசிரியர்களினதும் வர்ணப்படங்கள் அடங்கிய, இலங்கையின் கல்வி வரலாற்றுடன் புத்தளத்தின் கல்வி வரலாற்றை இணைத்து ஆவணப்படுத்திய முதல் முயற்சி.

ஐந்து கட்டுரைகள், சுவடிக்கூடம், ஒளிப்படப் பேழை உள்ளடங்கிய 565 பக்கங்கள் கொண்ட மெகா சஞ்சிகையின் அறிமுக விழா Doha -Qatar இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தளத்தை சேர்ந்த புத்தகத்தின் எழுத்தாளர் Z.A சன்ஹிர் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்று சிறப்பம்சமாக நிகழ்வில் நீங்களும் பங்குகொண்டு பயன்பெறுங்கள், உங்கள் வருகையை குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்களுக்கு அழைத்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

நேரம்: மாலை 7 மணி
திகதி : 25/01/2020 – சனிக்கிழமை
இடம்: Banana Restaurant

ஏற்பாட்டுக்குழு
தொடர்புகளுக்கு : அம்ஜத் 66447855 | வசீம் 66418604 | இஷாம் 66441447 | இனாஸ் 55673251


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All