Puttalam Online
star-person

ஸாஹிராவின் முன்னாள் அதிபர் S.A.C யாகூப் அவர்களின் ஆளுமையும் கல்லூரியின் அபிவிருத்தியும்

  • 23 January 2020
  • 655 views

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் முன்னாள் அதிபர் அவர்கள் மரணித்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு அவர்களின் சேவைகளை நினைவு கூற நாம் கடமைப் பட்டிருக்கின்றோம்.

புத்தளம் சாஹிரா வின் 75 ஆவது வருட பூர்த்தி விழாவை கொண்டாடும் சந்தர்ப்பத்தில் அவர் எம்மத்தியில் இல்லாமல் இருப்பது பெரும் மன வருத்தத்தைத் தருகிறது. ஏனெனில் எமது கல்லூரியின் கல்வி, மனிதவள, பெளதீகவள அபிவிருத்தியில் புத்தளம் வரலாற்றிலும், கல்லூரி வரலாற்றிலும் ஆசிரியர்களின் உள்ளங்களிலும், நீங்கா இடம் பிடித்து விட்டு அவர் சென்றுவிட்டார். பரீடசை அடைவுகள் அதிகரிப்பதற்கும்,
பல மாணவர்கள் பலகலைகழகம் செல்வதற்கும், சிறந்த தொழில்களை பெற்றுக்கொள்ளவும், மறைமுக காரணியாக அவர் இருந்துள்ளார்.

மனிதவள அபிவிருத்தியில் அவரது பங்களிப்புகள்

1. யாருக்கு என்ன வேலைகள் பொருத்தம் என்பதை இனம் கண்டார்.

2.சாஹிரா கல்லூரியின் கலாசாரத்தையும் Vision, Mission ஆகிவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுத்து செயல்படுத்தினார்.

3. முடிவுகள் எடுக்கும் முன்னர் முகாமைத்துவக் குழு உறுப்பினர்களதும், குறித்த துறை சார்ந்த ஆசிரியர்களினதும் ஆலோசனைகளை கேட்டு கொண்டார்.

4.முடிவுகள் மேலிருந்து கட்டளையாக இல்லாமல் கீழ்மட்ட வகுப்பாசிரியர்கள், பகுதி தலைவர்களின் அனுபவம் படிப்பினைகளின் அடிப்படையில் மாற்றங்களை மேற்கொண்டார்.

5.பிரச்சினைகள் தோன்றும்போது ஆரவாரம் இல்லாமல் தனித்தனியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரித்து விட்டு பொதுவாக இருதரப்பினரையும் வைத்து தீர்வை முன் வைப்பார்.

7.பெற்றோர்கள், மாணவர்கள் நேரடியாக ஆசிரியர்களோடு முரண்பட்டால் பிரச்சினைகளை தானே முன்வந்து தீர்ப்பதில் ஆர்வம் காட்டினார்.

8.ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் கடமை பட்டியலை வருடாந்த பொது வேலைத்திட்டங்களை பொருத்தமானவரகளை இனங்கண்டு எழுத்து மூலம் வழங்கினார்.

9.வருட இறுதியில் ஆசிரியர்களை அழைத்து பெற்ற படிப்பினைகளை பின்னோக்கி சென்று அவதானித்து அதற்கேற்ப எதிர்காலத்தில் பதவிகளில் மாற்றங்களை செய்தார்.

10. இது ஒரு தேசிய பாடசாலை என்பதனால் கல்வி அமைச்சின் செயலாளர், பணிப்பாளர்களின் கட்டளைளுக்கே முன்னுரிமை வழங்கினார்.

11.விஷேட வேலைகள் இருப்பின் அதனை சிறு தாளில் எழுதி குறிப்பிட்டு அவற்றுக்கு யார் பொறுப்பு என்பவற்றையும் அதில் குறிப்பிட்டு வழங்கியதோடு அதன் பிரதிகளையும் தன்னகத்தே வைத்துக் கொள்வார்.

12.விழாக்கள், வைபவங்கள் வருகின்ற பொழுது குறித்த விழாவோடு தொடர்புபட்டவர்கள் அழைத்து கலந்தாலோசனை செய்து யாருக்கு என்ன பொருத்தம் என்ற அடிப்படையில் வேலைகளை பகிர்ந்தளிதாதார்.

13.உள்ளக மேற்பார்வை செய்வதற்கான அனுபவமும் திறமையும் உடையவர்களை இனங்கண்டு அவர்களை கொண்டு உள்ளக மேற்பார்வை செய்தார்.

14. ஒவ்வொரு அம்சங்களுக்கும் பல மாதிரி படிவங்களை தயாரித்து அதன் மூலமே பணிகளை மேற்கொள்வார்.
அவரின் காலத்தில் தயாரிக்கப்பட்ட மாதிரி படிவங்களை தற்போதும் நடைமுறையில் உள்ளன.

15. சில வகுப்புகளில் பாடங்கள் நடைபெறாத பொழுது அவரே சென்று கற்பித்தலில் ஈடுபடுவார்.

பெளதீக வள அபிவிருத்தி

இவரது காலத்திலேயே பல்வேறு பெளதீக வள அபிவிருத்தி எமது கல்லூரி அடைந்து கொண்டது.
குறிப்பிடத்தக்கது.

1. 4 ஏக்கர் பரப்புடைய விசாலமான விளையாட்டு மைதானம் பல்வேறு போராட்டங்கள், வழக்குகளுக்கு பின்னர் நீதிமன்ற தீர்ப்பின்படி கல்லூரிக்கு சொந்தமானது.
(இவரது முயற்சி இதில் அளப்பெரியது)

2. பாடசாலை சுற்றுமதில் பூரணமாக கட்டி முடிக்கப்பட்டது.

3. தற்பொழுது புதிதாக கட்டப்பட்டுள்ள மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம், தொழில்நுற்ப பீடம், நிர்வாக கட்டிடம் என்பன இவரது காலத்திலேயே SDS உறுப்பினர்கள் நேரடியான பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட்டன.

4. தற்போதைய விளையாட்டு மைதானத்துக்கு ஒளியூட்டும் நடவடிக்கைகளும் இவரின் காலத்திலே ஆரம்பிக்கப்பட்டன.

இதனடிப்படையில் பார்கும்போது 75 வருடங்களை நிறைவடையும் இன்றைய ஸாஹிராவின் கல்வி, மனிதவள, பெளதீக வள அபிவிருத்தியின் பின்னணியில் அவரது ஆளுமை பிரதிபளிப்பதை அவதானிக்க முடிகின்றது.

அல்லாஹ் அவர்களின் பணிகளை அங்கீகரித்து சுவனத்தை வழங்குவானாக! ஆமீன்

Ash.Irfan Naleemi
Development Officer
Zahira College (National School)
Puttalam


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All