Puttalam Online
current

கத்தாரில் வரலாற்று சிறப்புமிக்க நூல் அறிமுக விழா

  • 28 January 2020
  • 284 views

கத்தாரில் வரலாற்று சிறப்புமிக்க நூல் அறிமுக விழா (25/01/2020) சனிக்கிழமை பனானா உணவக கேட்போர் கூடத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

புத்தளம் நகரில் வெளியிடப்பட்ட ஒரு மெகா சஞ்சிகை ஒன்று வெளிநாடு ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டமை புத்தளம் வரலாற்றில் மாபெரும் மைல்கல் என்றே குறிப்பிடமுடியும். இவ்வாறானதொரு நிகழ்வில் சுமார் 35 பேர் பங்குபற்றினர்.

புத்தளம் வலயக்கல்வி பணிமனையின் ஓய்வுநிலை முன்னாள் உதவி கல்விப்பணிப்பாளர் திரு இஸட்.ஏ. சன்ஹிர் அவர்களால் தொகுத்து எழுதப்பட்ட ‘வித்தியாலயம்’  சஞ்சிகையின் மேற்படி அறிமுக நிகழ்வை சகோ இஷாம் மரிக்கார் மிக அழகாக தொகுத்து வழங்கினார்.

முன்னதாக நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்ற அதேவேளை இந்நூலின் பெறுமதியும், ஆவணமாக்கிய மலர் ஆசிரியரின் முயற்சியின் பலனையும் நாம் போற்ற வேண்டும். அதனை நாம் ஒரு பொக்கிஷமாக பேணி பாதுகாக்க வேண்டும் என்பதாகவும் அவரது உரை அமைந்திருந்தது.

மலர் ஆசிரியரான திரு இஸட்.ஏ.சன்ஹிர் அவர்களை பற்றி சகோ. இனால் அலி உரை நிகழ்த்தினார். இவ்வுரையில் மலர் ஆசிரியர் புத்தளம் சமூகத்திற்கு செய்த சேவைகள், அவர் காலா காலமாக சேகரித்து வரும் ஆவணங்கள் உள்ளிட்ட விடயங்களையும் உள்ளடக்கியிருந்தார்.

அதனை தொடர்ந்து மலர் ஆசிரியரின் உரை அமைந்திருந்தது. இந்நூலை எழுதுவதற்கு ஆரம்ப நாட்களில் ஊக்கப்படுத்தியவர்கள், இதற்கு நிதி உதவி செய்து ஆரம்ப வடிவமைக்கு முயற்சித்தவர்கள் அடங்கலாக ஆவணங்களை சேகரிக்க எடுத்துக்கொண்ட சவால்கள் உள்ளிட்ட விடயங்களையும், அமெரிக்கா தொடக்கம் அவுஸ்திரேலியா வரை இந்நூலை ஆர்வத்துடன் எடுத்து சென்றவர்கள் உள்ளிட்ட விடயங்களையும் தனதுரையில் விபரித்து இருந்தார்.

இறுதியாக சகோ அம்ஜத் நிகழ்வுக்கு ஆர்வத்துடன் வந்திருந்தவர் மற்றும் ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்க இராப்போசனத்துடன் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All